பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 249 இப்பாடலின்படி, ஒப்பற்ற யானைப்படையும், விரைவில் பாய்கின்ற குதிரைப் படையும், நெடிய கொடி கட்டப்பட்ட தேர்ப்படையும், வைரம் பாய்ந்த நெஞ்சுடைய காலாட்படையும் என்ற நால்வகைப் படையுடன் உன் ஆட்சி, மாட்சிமை பெற்றிருந்தாலும் (மாண்டது. ஆயினும்) நீ பெறும் வெற்றி இவற்றால் அன்று (பின்னர் எது எனில்) மாட்சிமைப்பட்ட (மாண்ட அறத்தையும், அறவழியையும் அடிப்படையாகக் கொண்டே ஆகும். - : இப்பாடல், கம்பன் மனத்தில் ஒரு துண்டுதலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இராவணனுடைய படைபலம், வரபலம், ஆயுதபலம் என்பவற்றிற்கு ஈடு இணையே இல்லை. போதாததற்கு இவை அனைத்தையும் உடைய இந்திரசித்தன், இராமனும் கைவிதிர்க்கும்படியான கும் பகர்ணன் ஆகியோரின் துணைபலம் இவை ஒருபுறம். இராவணன் பலமனைத்தும் நான்குடன் மாண்டதாயினும், அங்கே அறம் என்பதே இல்லை. அறநெறிச் செல்லும் பழக்கத்தை அரக்கர் கோமான் என்றோ கை விட்டுவிட்டான். இவனை எதிர்த்து நிற்கும் இராகவன் படை குரங்குகளால் ஆனது, என்றாலும், அறமும், அறநெறியும் இராமனிடம் உள்ளன. அதனால் வெற்றி யாருக்கு என்பது தெரிந்த விஷயமே. - புறநானுாற்றின் இக்கருத்தை, வளர்ந்துவரும் சோழர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அறிந்து, அதன்படி நடந்தாலொழிய அவர்கள் பெறும் வெற்றிகள் நிலைபெறாமல் போய்விடும் என்பதை அழுத்தமாகக் கூற விரும்புகிறான் கம்பன். அதனாலேயே, காப்பிய நாயகனாகிய இராமனை அறத்தின் மூர்த்தி, அற ஆழியன், அறத்தின் நாயகன் என்றெல்லாம் சந்தர்ப்பம் நேரும்பொழுதெல்லாம் இந்த அடைமொழியை இராமனுக்குக் கொடுத்துக்கொண்டே வருகிறான். தாடகை வதத்தில் தொடங்கி, முதற்போர் புரிகின்ற வரையில் இராமன் செய்த போர்கள் பலப்பல வழுகும்.ஆயிரக் கணக்கான கொண்ட கர துitaர்க்ள்ை வென்றது முதல், தனியர்க் நின்ற் விர்ாதனை