பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அசஞானசம்பந்தன் 253 "அயர்திதிலென் முடிவும் அஃதே. ஆயினும், அறிஞர் 鳗 豪 . . . * - - ஆயந்த நயத்துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ? புயத்துறை வலியரேனும், பொறையொடும் பொருந்தி . . : வாழ்தல் சயத்துறை, அறனும் அஃதே' என்று இவை சமையச் . சொன்னான்" (6981) எந்த நிலையிலும், மனைவியை இழந்த நிலையிலும் கூட இழப்பித்தவனைத் தண்டிக்க வந்த நிலையிலும் கூட அறநெறி பிறழாதவன் இராகவன் என்பதைக் காட்டுகிறான், கம்பன். வருங்காலச் சமுதாயத்திற்கும், வளர்ந்துவரும் சோழப் பேரரசிற்கும் அறவுரை கூறவந்த கம்பன் வாய்ப்புக் கிடைக்கும்தோறும், அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறம் - 55) என்பதை நினைவூட்டத் தவறவில்லை. கரன், கும்பகர்ணன், படைத்தலைவர், அதிகாயன், இந்திர சித்தன், மகரக் கண்ணன், இராவணன் ஆகிய இவ்வனைவரும் தனித்தனியே இராமனுடன் போர் செய்தன்ர். இந்தப் போர்களில், ஒரு போரைப்போல மற்றொரு போர் நிகழ்ந்ததாகக் கவிஞன் பாடவில்லை. அதிலும் ஒரு வியப்பு என்னவென்றால், எதிரிகள் தாம் தனித்தனியாக வந்து போரிட்டனரே தவிர, அனைத்துப் போரிலும் இப்பக்கத்தில் இராம, இலக்குவர் என்ற இருவர் மட்டுமே போர்புரிந்தனர். கரன் முதல் இராவணன் வரை உள்ளவர்கள் பல்வேறு படைக்கலங்களைக் கொண்டிருந்தமையின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் போரிட்டனர். இராம, இலக்குவர்களைப் பொறுத்தவரையில் வில், அம்புகள் என்பவை தவிர வேறுவகைப்பட்ட படைக்கலங்கள் எதுவுமில்லை என்பதை அறியும் பொழுது வியப்பு அதிகமாகிறது. அப்படி இருக்க, போர்களைப் பற்றி விரிவாகப் பாடும் கம்பன், ஒரு போரைப்போல் மற்றொரு போர் இல்லாமல், புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு யுத்த காண்டத்தைப் பாடுகிறான். கதை நிகழ்ச்சிகள் எதுவுமில்லாமல், போரைப் பற்றிப் பாடும்புெழுது