பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 23 ஏற்பட்டது. .இதுவரை அவன் சிந்தனை செய்யாத பேராற்றல் ஒன்று மேலே இருந்துகொண்டு இங்குள்ள அனைவரையும் இயக்குகிறது என்பதை முதன்முதலாக உணரத்துவங்குகிறான். மக்கள், தேவர், நரகர், அசுரர் முதலிய அனைவரையும் வென்றாலும் அந்த மாபெரும் ஆற்றலின் எதிரே இந்த வெற்றிகள் அர்த்தமற்றவையாகி விடுகின்றன என்பதை உணர்ந்த இந்திரசித்தன் முற்றிலும் மனம் மாறிய நிலையில் இதுவரை செய்யாத செயல் செய்யத் துவங்குகிறான்”. இந்திாசித்து என்ற பாத்திரம் தோல்வி அறியாதது, துணிவு மிக்கது. மேகநாதன் என்ற இயற்பெயர் அவனுக்கே நினைப்பில் இல்லாத அளவுக்கு வெற்றிச் சிறப்பால் இந்திரசித்தன் என்று வந்து ஒட்டிய பெயரே நிலைத்திட்ட நிலையுடையவன் மனத்திலே தொய்வு ஏற்பட்டுவிட்டது, அவனுக்கு. இந்த மாற்றம் அவனுள் ஏற்பட்டதை நிகழ்த்துகிறார், பேராசிரியர். முன்னும் வாலிபால் ஏற்பட்ட மாற்றத்தைப் பேராசிரியர் விளக்கியிருப்பதை இங்கே நினைவூட்டிக் கொள்வது பொருத்தமாக இருக்கும். வாலியிடம் ஏற்பட்ட மாற்றமும் இங்கே இந்திரசித்தனிடம் ஏற்பட்ட மாற்றமும் முற்றிலும் துருவ நிலை மாற்றம்தான். தெய்வ சக்தியை இருவரும் உணர்ந்தனர் என்பதிலும் ஒற்றுமை உண்டு. ஆனால், இருவரிடையே வேற்றுமை உண்டென்பதே இங்கே உணரவேண்டிய செய்தி. முன்னதில் சரணாகதி நிலை விளைந்தது. பின்னதில் அதற்கு இடம் இல்லை. இந்த ஒற்றுமை வேற்றுமைகளை இப்போது இங்கே விரிக்க விரும்பவில்லை. பயில்வோர் ஒப்பிட்டு உணரத் தலைப்படுக. - - மேலே இருந்து இயக்கும் ஒரு மாபெரும் ஆற்றலை உணர்ந்த இந்திரசித்துவுக்குத் தன் அழிவு தெளிவாகத் தெரிந்துவிட்டது. இந்த மாறிய சூழ்நிலையில் இந்தப் பாத்திரம்