பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 கம்பன் எடுத்த முத்துக்கள் பக்கம் செலுத்தி அவர்கள் நிலை அறிகின்றனர். இந்த துணுக்கத்தையும் கம்பநாடன் பேசுகிறான். "கொள்ளியின் சுடர் அனலிதன் பகழி கைக்கொண்டான்; அள்ளி நுங்கலாம் ஆர் இருட் பிழம்பினை அழித்தான் - o (8629) என்ற இப்பாடல்மூலம் இருளில் உள்ள பகைவர்களின் நிலையை அறிய ஒளி உமிழும் பானங்களைப் பயன்படுத்தினர் என்று தெரிகிறது. இக்காலத்தில் பெருந்தலைவர்கள், போர்த் தளபதிகள் முதலானோர் இறந்தால் அவர்களுடைய சடலம் தேசியக் கொடியால் போர்த்தப்பட்டு இடுகாடுவரை எடுத்துச் செல்லப்படும் என்பதை நாம் அறிவோம். எகிப்திய நாட்டில் பரோக்கள் ஆண்ட காலத்தில் அவர்கள் இறந்தால், பிரமிடுகளின் உள்ளே சடலங்களை வைத்து மூடிவிடுவார்கள். இந்தச் சடங்கில் முக்கியமான பகுதி என்னவென்றால், அந்த அரசர்கள் பயன்படுத்திய அத்தனை சாமான்களும், கொடி உள்பட, அவர்கள் சடலத்தின் பக்கத்தில் வைக்கப்படும். ஆகவே, இத்தகைய பழக்கம் மிகப் பழமையானது என்பதை அறிகிறோம். கம்பனும் இதனை அறிந்து தன் பாடலில் இந்நிகழ்ச்சியைப் பேசுகிறான். - "கொற்ற வெண்குடையோடு கொடி மிடைந்து, உற்ற ஈம விதியின் உடம்படிஇ, சுற்ற மாதர் தொடர்ந்து உடன் சூழ்வர, மற்ற வீரன் விதியின் வழங்கினான்" - (யுத்தகாண்டம்-மிகைப்பாடல்-1024) போர் என்று வந்துவிட்டால் தர்ம, நியாயங்கள் பார்க்க அங்கு இடமில்லை. எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்பதுதான் குறிக்கோளே தவிர, இது முறையா? இது அறமா' என்று பார்க்கத் தேவையில்லை என்ற கருத்து இன்றும் உலக முழுதும் பரவி உள்ளது. ஆனால், தமிழர்களைப் பொறுத்த மட்டில் போராயினும், ஆட்சியாயினும் அறத்தின்