பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 261 அடிப்படையிலேயே நடைபெறவேண்டும் என்று கருதினர். புறநானூற்றில் உள்ள, "ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும். (புறம்-9) என்ற புறப்பாடல் இக்கருத்தை வலியுறுத்துகின்றது. ஆனால், இருதரப்பினரிடைப் போர் நிகழ்ந்தால் இருவருமே அறவழியில் நின்று போரிடுவர் எனக் கூறமுடியாது. இலக்குவனுக்கும் இந்திரசித்தனுக்கும் இடையே நடைபெறும் போரில், கம்பன் இக்கருத்தை வலியுறுத்துகிறான் இலக்குவனிடம் மாயப்போர் பல செய்தும் .ெ துயரத்திற்கு ஒரே காரணம் இலக்குவன் அறவழி பிறழ்ந்து போர் செய்யவில்லை என்பதுதான். " இலக்குவன் தன்பால் உள்ள முதலவன் படையாகிய பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்த மறுத்துவிட்டான். அவன் அவ்வாறு பயன்படுத்தியிருந்தால் அது என்னைமட்டும் அழிக்காது, உலகத்தின் பெரும் பகுதியையும் அழித்துவிடுமே என்று அஞ்சிப் பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தாமையால் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்" என்ற கருத்தில் தந்தையிடம் பேசுவதாக உள்ள கம்பன் பாடல் வருமாறு: '

  1. 3

முட்டிய செருவில், முன்னம் முதலவன் படையை என்மேல் விட்டிலன், உலகை அஞ்சி; ஆதலால், வென்று மீண்டேன்; கிட்டிய போதும் காத்தான்; இன்னமும் கிளர வல்லான்; சுட்டிய வலியினாலே கோறலைத் துணிந்து நின்றான்.(9120) இந்திரசித்தனைக் கொல்வது மிக முக்கியமானது என்றாலும், அதற்காக நான்முகன் படையை ஏவி உலகுக்கு ஊறு விளைவிக்க இலக்குவன் விரும்பவில்லை என்பதை இந்திரசித்தனே ஒப்புக்கொள்கிறான். இதுவே அறப்போர் எனப்படும். இத்துணை நுணுக்கங்களுடன் போரைப் பற்றி 9ம் நூற்றாண்டிலேயே பாடிய கவிஞன் தீர்க்கதரிசி என்பதில் எவ்வித ஐயமுமில்லை. - கம்ப இராமாயணத்தின் கடைசிக் காண்டமாகிய யுத்த காண்டம் 39 படலங்களைக் கொண்டது. கடல் காண் படலம் தொடங்கி, விடை கொடுத்த படலம் ஈறாக உள்ள