பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 கம்பன் எடுத்த முத்துக்கள் கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ? வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ? - - - (6374) என்று கூறி முடிக்கின்றான். நூற்றுக்கணக்கான பாடல்கள் மூலம் அண்ணனுக்கு அறம் உரைத்தவன் இறுதியாகச் சொன்ன வார்த்தைகள், "வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு வாய்க்குமோ?" என்பதாகும். இத்துணைத் தூரம் அறத்தை நம்பிய ஒருவன், அறத்தின் மூர்த்திபால் சேர்ந்ததில் வியப்பொன்றுமில்லை. பிறந்தது முதல் இலங்கை நாகரிகத்தோடு ஒத்துப்போகாமல் கொழுகொம்பின்றி வாடிய வீடணன் என்னும் கொடி, அறத்தையே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட கொடி, அறத்தின் மூர்த்தி இலங்கைக்கரையில் மறுபுறத்தில் வந்து தங்கி உள்ளான் என்பதை அறிந்தபொழுது, இட்ையீடு களையும், இடையூறுகளையும் கடந்து இராமனாகிய கொழுகொம்பைப் பற்றிப் படர்ந்ததில் வியப்பொன்று மில்லை. - அனைவரையும் இழந்து தனியனாய் நிற்கின்றபொழுது தான், இராவணன் இராமனை, இவனோதான் அவ்வேத முதற்காரணன் என்று உணருகின்றான். அறவழியில் செல்லாத் அவனுக்கே இந்நல்லுணர்வு இறுதி நேரத்தில் வந்துற்றது என்றால், மனம், மொழி மெய்களால் அறத்தையே தழுவி நின்ற வீடணனுக்கு இராமனை அறிந்துகொள்வதில் கஷ்டம் எதுவும் ஏற்படவில்லை. எனவே, வீடணன் செய்தது சரியே என்று ஏற்பதில் தவறு ஒன்றுமில்லை. அடுத்து நிற்கும் வினா, இராமனுக்கு இலங்கையின் இரகசியங்களை இவன் ஏன் கூறவேண்டும், அப்படிக் கூறுவது துரோகமல்லவா. - என்பதாகும். இதனைப் புரிந்து கொள்வதற்கு, சில அடிப்படைகளை அறிய வேண்டும். இராமனிடம் சென்றுவிட்ட பிறகு, இராவணன் உறவு முற்றிலுமாகத் துறக்கப்படுகிறது. இது சரியா என்று கேட்பதில் பயனில்லை. இன்றும்கூட இச் சமுதாயத்தில் இது நடை பெறுகிறது. ஒரு கோத்திர்த்தில் பிறந்த ஒருவன், மற்றொரு