பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 273 கோத்திரத்தில் உள்ள ஒருவனுக்குத் தத்தாகப் போய்விட்டால், போன அன்றிலிருந்தே பெற்ற தகப்பனுக்கும் இவனுக்கும் உள்ள உறவு துண்டிக்கப்படுகிறது. பெற்ற தகப்பன் இறந்தால் அவனுக்குக் கொள்ளிபோடவோ, பதினாறு நாள் துயரம் அனுஷ்டிக்கவோ தத்துப்போனவனுக்கு உரிமை இல்லை. இதே கருத்தை வீடணன் கூற்றாகக் கம்பன் கூறுகிறான். விளைவினை அறியும் மேன்மை வீடணன், என்றும் வியா அளவு அறு ருெமைச்செல்வம் அளித்தனை ஆயின், ஐய! களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர, இளையவற் கவித்த மோலி என்னையும் கவித்தி என்றான் (6506) அரக்கன்பின் தோன்றிய கடமை தீரவேண்டும் என்று விரும்புகிறான் வீடணன், சாத்திரப்படி தத்துப் போனவர்கட்கு இது பொருந்தும். ஆனாலும் பெற்ற தகப்பன் உறவு முற்றிலும் நீக்கப்படுவதில்லை. அதனால் மூன்று நாள் தீட்டு தத்தாக வந்தவனுக்கு உண்டு என்று கூறுவர். ஆனால், வீடணன், தத்துப் போனபொழுது முற்றிலுமாக அந்த உறவை வெட்டிக் கொள்ள விரும்புகிறான். அதனை எவ்வாறு செய்ய முடியும் என்று ஆராய்ந்த வீடணன் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறான். உயிர்கள் எல்லாவகை பந்தங்களில் இருந்தும் முற்றிலும் நீங்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழிதான் இருக்க முடியும். இறைவனுடைய நயன தீட்சை, ஸ்பரிச தீட்சை, திருவடி தீட்சை என்ற மூன்றில் ஒன்றைப் பெற்றால் பழைய பந்தங்கள் அறவே நீங்கிவிடும். இராமனுடைய பார்வையைப் நயன தீட்சை பெற்றதால் பழைய பந்தங்கள். நீங்கின என்றாலும், மூன்று தீட்ரீச்களிலும் சிறந்ததாகிய திருவடி தீட்சை ப்ெறுவதன் மூலம் முற்றிலும் பந்தங்களைப் போக்கிக்கொள்ள முடியும் என்பதால், "இளையவற் கவித்த மோலி என்னையும் கவித்தி என்று "உம்பூரின் ஒருமுழம் உயர்ந்த ஞானத்தம்பி" ஆகிய வீடணன் வேண்டுதிறான்.திருவடி தீட்சையின் பின்னர் இறைவனுக்குப் பணி செய்யும் தொண்டர்களில் ஒருவனாகி விடுகிறான். 'இறைவனைத் தவிர, அவனுக்கென்று எந்த உறவும் இல்லை. அவன் பணியினை நிறைவேற்றுவதே தொண்டர்களின் கடமையாகும். - ክጽ