பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 கம்பன் எடுத்த முத்துக்கள் என்று அஞ்சினான். எனவே, மாரீசனை மானாக அனுப்பி இருவரையும் பிரித்து, பிராட்டியைச் சிறை செய்தான். இவை அனைத்திற்கும் ஆழமாக மறைந்து கிடப்பது இராவணன் தன் உயிர்மேல் கொண்ட ஆசையே ஆகும். இந்ததுணுக்கத்தை ச்சுத்த வீரனாகியன கும்பன்கூட அறிந்து கொண்டானா என்று கூறுவதற்கில்லை. "உம்பரின் ஒரு முழம் உயர்ந்த ஞானத்தம்பி” யாகிய வீடணன் பிறர் யாரும் அறியாத இந்த ரகசியத்தை அறிந்து கொண்டான், அதை நேரிடையாகச் சொல்லாமல், சீதையைக் கவர்ந்த செயல் இராவணன் உயிர்க்கு இறுதி மூட்டும் என்று சொல்லத் த்ொடங்குகிறான். அதற்குரிய காரண காரியங்களைத் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்துகிறான் கயிலைநாதனிடம்கூட்த் தனக்குத் தோல்வி இல்லை என்று சொல்லிக்கொண்டு இறுமாந்து நிற்கும் இராவணனைப் பார்த்து உன்னுடைய வர பலத்தை மிகுதியும் நம்பி இருக்கிறாய் ஆன்ால், அந்த வரத்தில் மனிதர்களாலோ விலங்குகளாலோ கொல்லப்படக்கூடாது என்ற வரத்தை நீ ப்ெறவில்லை. மனிதர்களால் உனக்கு இறுதி நேரலாம் என்பதற்குக், கார்த்தவீரியனிடம் நீ தோற்றதும் (6149), விலங்குகளால் உனக்குத் தோல்வி உண்டு என்பதற்கு வாலியிடம் நீ தோற்றதும். 515).உதாரணங்களாகும். எனவே, இப்பொழுது விலங்கும், மனிதர்களும் சேர்ந்து வந்திருக்கின்றனர். ஆதலால் உன் உயிருக்கு இறுதி நேருவது. திண்ணம். இம்மட்டோடல்லாமல், வேகவதி என்ற பெண்ணின் சாபத்தையும் நீ பெற்றுள்ளாய். வேகவதியே இப்பொழுது சீதையாக வந்துள்ளாள் என்பதை நீ மறவாதே 16:52, இராவணனுடைய வரபலத்திடம் உள்ள ஒட்டைகளை எடுத்துக்காட்டிய வீடணன், அவன் உயிருக்கு அஞ்ச வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது என்பதை மிக அற்புதம்ாக எடுத்துக்காட்டுகிறான். மேலே கூறிய மூவருள் (மனிதர் விலங்கு பெண்) எவரேனும் ஒருவர் கூட அவனைக் கொல்லமுடியும் என்பதை விளக்கமாக எடுத்துக்காட்டி,