பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 283 போர்க்களம் வந்த ஒரு மாவீரன் என்பதை அறிந்ததும் இராமன் கைகள் நடுங்கின என்கிறான் கவிஞன். மானம் என்பது பற்றி இராவணன் அடிக்கடி பேசினானே தவிர அதனைப் பெரிதாகப் போற்றியதாகத் தெரியவில்லை. ஆனால், கும்பகர்ணன் மானம் என்பது பற்றி அதிகம் பேசாவிட்டாலும் சந்தர்ப்பம் வரும்பொழுது மானத்தைப் பெரிதாக நினைக்கிறான். இறக்கப்போகும் தறுவாயில் தன் முகத்தில் மூக்கு இல்லாமையை உணர்ந்து, இராமனைப் பார்த்து, "மூக்கிலா முகமென்று முனிவர்களும் அமரர்களும் நோக்குவார் நோக்காமை, நுன் கணையால் என் கழுத்தை நீக்குவாய்; நீக்கியபின், நெடுந்தலையைக் கருங்கடலுள் போக்குவாய் "(7628) என்று வரம் வேண்டுகிறான். இறந்த பிறகுகூடத் தன் உடலைப் பார்த்து யாரும் எள்ளி நகையாடிவிடக்கூடாது என்று நினைக்கும் கும்பகர்ணனின் மான உணர்ச்சி நம்மை வியக்கவைக்கிறது. இத்தகைய ஒரு பாத்திரப் படைப்பை வேறு எந்த இலக்கியத்திலும் காண முடியாது. இந்திரசித்து : சுந்தர காண்டத்தின் பிணிவீட்டு படலத்தில், இந்திரசித்தின் ஒரு பகுதியை நாம் காணமுடிகிறது. இந்திரசித்தனையும், கும்பகர்ணனையும் கவிச்சக்கரவர்த்தி நமக்கு அறிமுகம் செய்யும் நேரத்தில் அவர்கள் உறங்கிக்கொண்டிருக்கின்றனர். காப்பியத்தில் உள்ள பெருவீரர்கள் வரிசையில் இருவரும் இடம் பெறுகின்றவர்கள். சாதாரணமாக, பெருங்காப்பியங்களில் பெருவீரர்களை கவிஞன் அறிமுகப்படுத்தும்பொழுது அவர்கள் போர் செய்யும் சந்தர்ப்பத்திலோ சூளுரை வழங்கும் சந்தர்ப்பத்திலோதான், அறிமுகம் செய்வர். உலகக் காப்பியங்கள் பெரும்பாலானவற்றில் இம்முறைதான் கையாளப்படும். இதற்கு மாறாக, கும்பன், இந்திரசித்து ஆகிய இருவரையும் உறங்குகின்ற நிலையில் அறிமுகம் செய்கிறான் கம்பன். உறங்குகின்ற இவர்களை மறைவாக நின்று காண்பவன்