பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 - கம்பன் எடுத்த முத்துக்கள் மாருதி என்பதை மறத்தலாகாது. அறிவின் வடிவமாகிய மாருதி முதன்முதலில் இன்னார் என்று அறியாமலேயே தனித்தனிய்ாக இவர்களைக் காண்கிறான். உறங்குகின்ற இந்திரசித்தனைக் காணுகிற் மாருதியின் மனத்தில் தோன்றும் எண்ணங்களைக் கம்பன் இதோ கூறுகிறான்: 朗邸ašss态哗虫森臣理凝总经s顿领晚始甲多哆哆母治甲峻 கணிச்சியான் மகனோ? அளையில் வாள் அரி அனையவன்-யாவனோ? அறியேன், இளைய விரனும், ஏந்தலும், இருவரும், பலநாள் உளைய உள்ளபோர் இவனொடும் உளது எனஉணர்ந்தான் w . (4975) இவனை இன்துணை உடையபோர் இராவணன், என்னே புவனம் மூன்றையும் வென்றது ஒர் பொருள் எனப்புகறல்? சிவனை, நான்முகத்து ஒருவனை, திருநெடுமால் ஆம் அவனை, அல்லவர் நிகர்ப்பவர் என்பதும், அறிவோ? - . (4976) பகைமை, வெறுப்பு, சினம் இவற்றால் நிறைந்த மனத்துடன் உறங்குகின்ற பகைவனைப் பார்க்கின்றான் அனுமன். அவன் இந்திரசித்து என்பதும், இராவணன் மகன் என்பதும் அனுமனுக்குத் தெரியாத நிலை, என்றாலும் அவன் போற்றி வணங்கும் இராமனும், இளையவனும் இந்த உற்ங்குகின்ற வீரனுடன் பலநாள் போர் செய்ய வேண்டிவ்ரும் என்று கணித்துவிடுகிறான், இது வியப்பினும் வியப்பே ஓர் அம்பால் இராமன், வாலியின் உரம் கிழித்ததை நேரே கண்ட அனுமன். இராமனின் வன்மையை நன்கு எடையிட்டு அறிந்தவன். அனுமன், அதே அம்பை உடைய இராமனும், அவன் தம்பியும் சேர்ந்துகூடப் பலநாள் இவனுடன் உளைய உள்ள போர் உண்டு என்ற முடிவிற்கு அனுமன் வந்தான். இந்த வியப்பு மற்றொரு வகையிலும் வெளிப்படுகிறது. மூவுலகத்தையும் வென்றவன் என்றதால் அவன்மாட்டுப் பெருமதிப்புவைத்திருந்தான். இப்பொழுது இந்திரசித்தனைப் பார்த்தவுடன் இப்படி ஒரு துணைவன் இராவணனுக்குக் கிடைத்தவுடன் அவன் மூன்றுலகத்தையும் வென்றான் என்று