பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 285 வியப்பதில் ஒரு பொருளே இல்லை என்று கருதுகிறான் அனுமன். ஊர்தேடு படலத்தில், இந்திரசித்தனை இவ்வாறு அறிமுகம் செய்த கவிஞன், பிணிவீட்டு படலத்தில் அனுமனோடு இந்திரசித்து போர் செய்வதை நமக்குக் காட்டுகிறான். அனுமனைப் பிணித்து இராவணனிடம் கொண்டு காட்டும்பொழுது, இந்திரசித்தனின் அறிவு திறத்தையும், பகைவரை மதிக்கும் பண்பினையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறான். தந்தையைப்போல் பகையைக் குன்றத்து மதிக்கும் தவற்றை இந்திரசித்தன் செய்யவில்லை. அடுத்தபடியாக இராவணன் மந்திரசபையில் . இந்திரசித்தன் பேசுவதைக் காட்டுகிறான் கவிஞன். பின்னர் நர்ம் அவனைக் காண்பது நாகபாசப் படலத்தி லாகும். அதிகாயன் இறந்தான் என்ற செய்தி கேட்டுத் துயரத்தில் ஆழ்ந்து நிற்கும் இராவணனை இந்திரசித்தன் காணவருகிறான். அதிகாயன் இறந்த செய்தி அறிந்து, தந்தையிடம் சீறுகிறான் இந்திரசித்தன். பகைவர்களின் வன்மையைக் கரதுடனர் வதம் முதல் ஒரளவு அறிந்திருந்தும், அக்க குமாரனையும், அதிகாயனையும் இராவணன் போருக்கு அனுப்பியதே தவறு என்று ஏசுகிறான். இளம்பிள்ளைகளாகிய இவர்கள் இருவரையும் நீயே போருக்கு அனுப்பிப் புலி கடாவாக மாற்றினாய் என்ற கருத்தில், கொன்றார் அவரோ "கொலை சூழ்க!" என் கொடுத்தாய்; வன்தானையர் மானிடர் வன்மை அறிந்தும் மன்னா! என்றானும் எனைச் செல ஏவலை; இற்றது என்னா - (8008) என்று கூறினான். நடந்தவற்றை அறிந்துகொண்ட இந்திரசித்தன் ஒருவாறு இலக்குவன் ஆற்றலை எடையிட்டுக் கொண்டான். எனவே, சாதாரணத்தேவர்களோடு புரிந்த போர்களில் பயன்படுத்திய