பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 கம்பன் எடுத்த முத்துக்கள் அம்புகளை, இப்பொழுது புறக்கணித்துவிடுகிறான். இரண்டு முக்கியமான கணைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். இந்த இரண்டும் தேவர்கள் முதலானவர்களோடு செய்த போரில் பயன்படுத்தப்படாதவை. எனவே ஆழ்ந்த சிந்தனையுடன் பாம்பின் படையும், பாசுபதத்தினோடு” (8013 இதுவரை பாதுகாத்து வைத்திருந்தேன். அதனைப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் வந்துவிட்டது என்றால், இலக்குவனைப் பாராமலேயே இந்த இரண்டும் அவனுக்குரியவை என்ற முடிவிற்கு வந்துவிட்டான். இதன் மூலம் பகைவனைத்துல்லியமாக எடை இடும் இந்திரசித்தின் அறிவுத் திறத்தை அறிந்துகொள்ளச் செய்கிறான் கம்பன். இராவணன் சீதையைக் கவர்ந்த செயலை இந்திரசித்தன் ம்னம் ஒப்பி ஏற்கவில்லை என்றாலும், தந்தைக்காகப் போர்புரிய வேண்டும் என்று இதுவரை நினைத்திருந்தான், தன் அரும் மைத்தம்பி அதிகாயனை இலக்குவன் கொன்று விட்டான் என்று கேள்விப் பட்டவுடன், இந்திரசித்தன் சினம் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்துடன் மீதுர்ந்து செல்கிறது. அதனால் தந்தையை நோக்கி, கொன் நின்ற படைக்கலத்து எம்பியைக் கொன்றுளானை அந் நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால், மன் நின்ற நகர்க்கு இனி வாரலென் வாழ்வும் வேண்டேன் - (8010) அனுமனைப் பிணித்தபோது, தந்தையின் மானத்தைக் காக்க அச்செயலைச் செய்தான். அப்போரில் பழி வாங்கும் நோக்கம் எதுவுமில்லை. அக்க குமாரனை அனுமன் கொன்றது உண்மை என்றாலும், அவனைப் பழிவாங்க நினைக்கவில்லை. ஆனால், அதிகாயன் இறந்தபிறகு, அதுவும் தான் இதுவரை காணாத இலக்குவனால் அச்செயல் நிகழ்ந்தது என்றவுடன் தன் இன மானம் காக்க, இலக்குவனை ஒழித்தே தீரவேண்டும் என்ற எண்ணம் இந்திரசித்தனை முழுவதுமாக ஆட்கொண்டது.