பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரிய ர்.அசஞானசம்பந்தன் 293 கெடுத்தொழிந்தனை" என்று அவசரப்பட்டுக் கூறிவிட்டு, பிறகு தான் கூறியதற்கு வருந்தி அத்ற்கு ஒரு கழுவாய் தேடவேண்டும் என்று நினைத்து, அதற்கு ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, வீடணன் மனப்புண்ணுக்கு மருந்திடுவது போல, வீடணன் தந்த வெற்றி எது என்று இராமன் கூறினான் என்று நாம் நினைப்பதில் தவறில்லை. முன்னர், வாலி и і тут என்று முழுவதும் தெரிந்துகொள்ளாமலே, நின்னைச் செற்றவர், என்னைச் செற்றார் (3812) தலைமையோடு நின்தர்ரமும், உனக்கு இன்று தருவென் (3855) என்று அவசரப்பட்டு வாக்களித்துவிட்டு வாலியின் உரையாடலால் மனம் வருந்திய இராகவன், அதற்கு கழுவாய் தேடும் முறையில் "நீ இது பொறுத்தி (4093 என்று கூறி, அங்கதனிடம் வாளைக் கொடுத்தது இர்ாமன் பச்சாதாபத்தின் முதல் நிகழ்ச்சியாகும். இவ்வாறு கூறுவதால் இராமன் என்ற பாத்திரத்திற்கு ஒரு இழுக்கைக் கற்பித்துவிட்டதாக யாரும் நினையவேண்டியதில்லை. மனிதன் என்ற அடிப்படையில் தான் இப்பாத்திரத்தைப் படைத்து உலவவிடுகிறான் கம்பன். பண்பின் வடிவமாக உள்ள பெரியோர்கள் கூட சில சமயங்களில் மிகச் சிறிய தவறுகளை இழைத்துவிடுவர். அவர்கள் மனிதர்க்ள்தான் என்பதற்கு இதுவே சான்றாகும். சூர்ப்பனகையிடத்து, உரையாடியதும், இலக்குவன் பேச்சைத்தட்டிவிட்டு, சீதை விரும்பினாள் என்ற ஒரே காரணத்திற்காக மானைப் பிடிக்கப்போனதும், வாலி யார்? என்று முழுவதும் அறியாமல் அவனைக் கொன்றதும், ஒரு பிழையும் செய்யாத வீடணனை, என்னைக் கெடுத்தொழிந்தனை என்று கூறியதும், குணமென்னும் குன்றேறிநின்ற இராகவன் போன்ற மனிதர்கள் செய்யும், அல்லது பேசும் மிகச் சிறிய பிழைகளாகும். இதனால் அவர்கள் உயர்வும், பெருமையும், சிறப்பும் எவ்விதத்திலும் குறைந்துவிடுவ தில்லை. இத்தகைய சிறு குறைகள் ஒரு பெரிய வரிைன் வாழ்க்கையில் காணப்படாவிட்டால், அவன் மனிதனாக இருந்தும் மனிதனாகக் கருதப்ப்டாமல், தெய்வமாகவே கருதப்படுவான். தெய்வமே ஆனாலும் மானிட உருத் தாங்கி, மண்ணிடை