பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 கம்பன் எடுத்த முத்துக்கள் பணி புரிகின்றேன் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். இராமனுக்கு முடி இல்லை என்று தெரிந்தவுடன் இலக்குவன் பேசியதையும், செய்யத்துணிந்ததையும் நினைவில் கொள்ளவேண்டும். அதேபோல, பரதனைத் தவறாக உணர்ந்து இராமனிடம் பேசியதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்விரண்டுமே இராமன் மாட்டுக் கொண்ட அன்பினால்தான் என்பது உண்மை என்றாலும், அந்த அன்பைக் கீறிப்பார்த்தால், அதனடியில் நான் என்பது தலைதுாக்கி நிற்கும். இந்த இரண்டு இடங்களிலும், இராமன் வருத்தமாகவும், கேலியாகவும் பேசி, இலக்குவனின் தன் முனைப்பைத் தட்டிவிடுவதை அந்தந்தப் பகுதிகளில் கம்பன் நுண்மையாகக் கூறியிருப்பதைக் காணலாம். இத்துணை நடந்தும், இலக்குவன் திருந்திவிட்டான் என்று கூறுவதற்கில்லை. தன்முனைப்பால் ஓரளவு வளர்ந்து தானே அவன் என்று நினைக்கும் நிலையை எட்டிவிடுகின்ற ஒரு சூழ்நிலையை முதற் போர் புரி படலத்தில் கம்பன் அற்புதமாகப் படைத்துக்காட்டுகிறான். முதற் போரிலேயே இலக்குவனின் பேராற்றலைக் கண்டு வியந்த இராவணன், இலக்குவனை முடிக்கக் கருதி, அயன் கொடுத்த வேற் படையை இலக்குவன்மேல் ஏவ, இலக்குவன் மண்ணில் சாய்ந்துவிடுகிறான். அப்படை இலக்குவனைக் கொல்லவில்லை என்பதை அறிந்த இராவணன் அவனைத் தூக்கிச் செல்ல விரும்பி இலக்குவன் பக்கத்தில் வந்து தன் இருபது கைகளையும் பயன்படுத்தி இலக்குவனைத் துக்க முயல்கிறான். மாபெரும் தவமும் ஈடு இணையற்ற வலிமையும் உடைய இராவணன் இரண்டு கைகளை உடைய இலக்குவனை தன் இருபது கரங்களாலும் தூக்க முடியாமைக்கு பேரா. டாக்டர் ம.ரா.போ. குருசாமி ஒரு முறை கூறிய விளக்கத்தை இங்கு காண்பது மிகவும் பொருத்தமுடியதாகும். இராவணனின் அளப்பறிய வரம் என்னும் பாற்கடலை சில நாட்களாக சீதை என்னும் பிறை கடையிட்ட பாற்கடலைத் தயிர்கடலாக மாற்றி விட்டது. நேர்மையற்ற காமம், தன் ஆற்றல் முழுவதையும் சல்லடைக் கண்களாக துளைத்து விட்டமையின் இப்பொழுது