பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 கம்பன் எடுத்த முத்துக்கள் பிசுபிசுத்துப் போனபிறகு, அவன் இதுவரை விடக் கூடாது. என்று வைத்திருந்த நான்முகன் படையைத் தொடுப்பதல்லாது வேறு வழியில்லை என்று நினைக்கிறான். அதற்கு அவன் கூறும் சமாதானம் பொருத்தமுடையதாகவே இருக்கிறது. 'தன்னை ஒருவர் கொல்லவந்தால் அவரை முதலில் கொல்வதில் தவறில்லை. நான் இப்பொழுது மறைவாக நின்று நான்முகன் படையைத் தொடுக்கவேண்டும். நான் இப்படையைத் தொடுக்கப்போகிறேன் என்று அவர்கள் அறிந்தால், அதே நான்முகன் படையை அவர்கள் ஏவி, என்னுடைய பிரம்மாத்திரத்தை அழித்துவிடுவர். அதே சந்தர்ப்பத்தில் என்னைக் கொல்லவும் செய்வர். தானாக இலக்குவன், நான்முகன் படையைத் தொடுக்க மாட்டானே தவிர, என் படையைத் தடுப்பதற்கு உறுதியாக இப்படையை ஏவுவான். அவ்வாறு அவன் செய்யாமல் இருக்க வேண்டு மானால், அதற்கு ஒரே வழித்ான் உண்டு. என்னுடைய மாயை புரியும் ஆற்றலால் அவர்களுக்குத் தெரியாமல் மற்ைந்து நின்று அவர்கள் போருக்குத் தயாராக இல்லாத நேரத்தில் "அயன் படை தொடுப்பேன்’ (8532, 8533) இந்திரசித்து தீட்டிய திட்டப்படி அவன் நடந்து கொள்ளுதற்கு ஏற்ற ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. மகரக் கண்ணன் அழிந்தபிறகு, பெரும் படையுடன் மகோதரன் இலக்குவன்னச் சாட வருகின்தான். அப்பெரும்போ.சி. இலக்குவன், சிவன் படையைப் பயன்படுத்தி அனைவரையும் அழித்து விடுகிறான். தனியனாக்கப்பட்ட மகோதரன் மறைந்து இராவணனிடம் திரும்பி விடுகிறான். களத்தில் யாரும் இல்லாத காரணத்தினால், அன்றைய போர் அதனுடன் முடிந்தது என்ற கருத்தில் இலக்குவன் முதலானோர் படைக் கலங்களைக் கீழே வைத்துவிட்டு ஒய்வெடுத்துக் கொள்ளலாயினர். எங்கும் ஒரே அமைதி நிலவ, ஒய்வில் மூழ்கியிருக்கும் இலக்குவன் முதலானவர்களைத் திடீரென்று ஆயிரக்கணக்கான அம்புகள் தாக்கின. சுக்கிரீவன், அனுமன், நீலன் முதல் இலக்குவன்வரை ஒவ்வொருவர் உடம்பிலும் ஆயிரக்கணக்கான பானங்கள் குத்தி நின்றன. சிவந்த மேனி உடைய இலக்குவன்மேல் ஆயிரக்கணக்கான அம்புகள்