பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 - கம்பன் எடுத்த முத்துக்கள் வருகின்ற மைந்தனின் முகவாட்டத்தையும், உடம்பில் உள்ள காயங்களையும் கண்டுக.ட இரக்கம் காட்டாத இராவணன் "படங்குறை 'அரவம் ஒத்தாய்; உற்றது பகர்தி" (917) என்று பேசுவது நமக்கேகூட வெறுப்பை அளிக்கிறது. தந்தைமாட்டுக் கொண்ட அன்பாலும், மரியாதையாலும் இன்று வர்ை வாய்மூடி, அவன் செயல்களை யெல்லாம் பொறுத்துக்கொண்டிருந்த இந்திரசித்தன் இப்பொழுது வெடிக்கிறான். அவனிடம் ஏற்பட்ட மனமாற்றத்தை அறிவிக்கும் முறையில் கவிஞன் பாடல்களை (9118, 919, 9120, 912, இங்கு அமைக்கிறான். இந்த மாற்றம் நாக பாசத்தில் தொடங்கி, நிகும்பலையில் இந்திரசித்தன் மனத்தில் மலைபோல் வளர்ந்துவிட்டது. போரின் முடிவு, நாள் கணக்கில் என்ற எண்ணம் வந்தவுடன் முழுவதுமாகத் தன் மனக்கருத்தைத் தந்தையிடம் சொல்லி ஏதாவது செய்ய முடியுமா என்று நினைக்கிறான். இராமன் பரம்பொருள் என்று கூறினால், இராவணன் மனத்தில் அது எடுபடாது என்பதை அறிந்தவனாகிய இந்திரசித்தன் எதனைச் சொன்னால் அவன் மனத்தில் மாற்றம் ஏற்படக்கூடும் என்று கருதி அதைமட்டும் இங்குக் கூறுகிறான். “அபிசார வேள்வி யாகிய நிகும்பலை யாகத்தின் இரகசியங்களை யெல்லாம் உன் தம்பியாகிய வீடணன் அவர்களிடம் கூறிவிட்டான். நான் ஏவிய தெய்வப்படைகள் மூன்றையும் இலக்குவன் ஆற்றலால் தடுத்தேவிட்டான்" (918). "மூன்று உலகங்களையும் அழிக்கக் கூடிய நாராயணப் படையை நான் ஏவியபொழுது அப்படை அவனை வலஞ்செய்து போவதைக் கண்டேன். உடனே, புரிந்து கொண்டேன். உன் குலத்தார் அனைவரும் செய்த பாவத்தால், கொடுமையான பகையினைத் தேடிக் கொண்டாய். கோபம் ஏற்பட்டால் உலகம் மூன்றையும் இலக்குவன் ஒருவனே முடித்துக்கட்டுவான்” (919) “கடுமையான போரின்கண் நான்முகன் படையை அவன் என்மீது ஏவவில்லை. அது ஏனென்றால் உலகத்திற்கு அதனால் ஏற்படும் அழிவை எண்ணி என்மேல் செலுத்தாமல் விட்டு விட்டான், அதனால் தான் அந்த நேரத்தில் வெற்றிகொண்டு உயிரோடு மீண்டேன்.