பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 கம்பன் எடுத்த முத்துக்கள் படலத்தில், நாக பாசத்தை ஏவுவதற்கு முன்னர், தன் தேரையும் கொடியையும் சாரதியையும் இலக்குவன் அழித்தான், அடுத்துத் தன் கவசத்தையும் உடைத்தான் இவன் மனிதனல்லன் என்ற முடிவுக்கு வந்தான். கருடன் வருகையால் நாக பாச விடுதலை கிடைத்ததும், மந்திர மலையைக் கொணர்ந்ததால் நான்முகன் படை வலியற்றுப் போனதம், இவர்கள் மனிதர்கள் அல்லர் என்ற அவன் எண்ணத்தை வலுப்பெறச் செய்தன. தான் இதுவரை பெற்றிருந்த வர பலமும் வில் ஆற்றலும் இவர்கட்கு முன் வலிவிழந்துவிடுவதை நேரே கண்டான் இந்திரசித்தன். அப்படியானால், இவர்களை வெல்ல அபிசார வேள்வி போன்ற ஒன்றை ரகசியமாக நடத்தி, அதனால் பெறும் புதிய வலிமையைக் கொண்டு, இவர்களை வெல்லத் துணிந்தான். பரம ரகசியமாகச் செய்யப்புகுந்ததன் வேள்வியில் இலக்குவன் வந்ததும், அதை அழித்ததும் இந்திரசித்தன் எதிர்பாராதவை. நாக பாசம், நான்முகன் படை என்பவற்றைத் தடுக்கும் ஆற்றல் அவர்களிடம் இருந்தது என்பதைக் கண்டதனால் இவ்விருபடைகளையும் நேரடியாகச் செலுத்தாமல் மறைந்து நின்றே செலுத்தினான். போருக்குத் தயாராக இல்லாமல், கவசம்கூட அணியாமல் ஆயுதங்களைப் பற்றி இராத நிலையில் இராம, இலக்குவர்கள் ஓய்வு எடுக்கும் நேரத்திலேயே இந்த இரு படைகளையும் இந்திரசித்தன் எய்தான். இத்தகைய சந்தர்ப்பங்களில் இலக்குவனின் படைகளை எதிர்க்கும் வாய்ப்பு இல்லாமலே போய்விடும் என்று அறிந்தே, போர்த் தந்திரம் மிக்க இந்திரசித்தன் மறைந்துநின்று செலுத்தினான். அவர்கள் மயங்கியதும், அவர்கள் கதை முடிந்தது என்று அவன் எண்ணியதிலும், தந்தையிடம் சென்று உன் பகையில் பாதியை முடித்தேன் என்று கூறுவதிலும் தவறு ஒன்றும் இல்லை. கருடன் வரவு இருவருக்குமே எதிர்பாராத அதிர்ச்சியைத் தந்தது. இந்த நிலையில்தான் நிகும்பலைப்போர் நடைபெற்றது. யாகத்தை முடிக்க வழியில்லாதபோது, இதுவரை இந்திரசித்தன் பயன்படுத்தாமல் காத்து வைத்திருந்த நாராயணப் படையை ஏவினான். ஒருவேளை இலக்குவன் அதே படையை அனுப்பி தன்னைத் தான் காத்துக்