பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 - கம்பன் எடுத்த முத்துக்கள் "சினத்தொடும் கொற்றம் முற்றி, இந்திரன் செல்வம் மேவி நினைத்தது முடித்து நின்றேன்; நேரிழை ஒருத்தி நீரால், எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி, உனக்கு நான் செய்வதானேன்! என்னின் யார் உலகத்து உள்ளார்?". (9224) இப்பாடலில் வரும், நினைத்தது எல்லாம் முடித்து நின்ற தனக்கு ஒரு பெண் காரணமாக, மகனுக்கு நீர்க்கடன் செய்யவேண்டி வந்ததே என வருந்துகிறான். மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய நீர்க்கடனை, தந்தை மகற்குச் செய்யும் அவலநிலை வந்ததையும், அதற்குக் காரணமாய் இருந்தது ஒரு பெண்ணே என்பதையும், இராவணன் பேசும்பொழுது அவன் தந்தைப்பாசம் எவ்வளவு ஆழமானது என்பதை அறியலாம். இந்த நிலையில், பந்த பாசங்கள், விருப்பு வெறுப்பு ஆகிய அனைத்தையும் கடந்து, போருக்குப் புறப்படுகிறான் இராவணன். இதுவரை, இன்று இல்லாவிட்டால் நாளைவெற்றி என்ற எண்ணத்தில் மிதந்து வந்த இராவணன் இது இறுதிப்போர் என்பதையும் இதில் இரண்டில் ஒன்று முடிவாகிவிடும் என்பதையும் உணர்ந்து பின்வருமாறு பேசுகிறான்: 'ம்ன்றல் அம்குழல் சனகி தன் மலர்க் கையான் வயிறு கொன்று அலந்தலைக்கொடு, நெடுந் துரி ைக் - குளித்தல்: அன்று இது என்றிடின், மயன் மகள் அத் தொழில் உறுதல்: இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென், தலைப்படின்

  • .* என்றான். (9667, இவ்வாறு வஞ்சினம் கூறித் தேர் ஏறும் இராவணன் மனநிலையை, இத்தேர் ஏறு படலத்தின் மூன்றாவது பாடலிலேயே மிக நுணுக்கமாக விளக்குகிறான் கம்பன்.

"ஈசனை, இமையா முக் கண் ஒருவனை, இருமைக்கு ஏற்ற பூசனை முறையின் செய்து. (9644) இந்த அடி ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும். சிவ பக்தனாகிய இராவணன் இமையா முக்கண் இறைவனைக் கடைசி