பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 323 "இளையவன்தனை அழைத்து, இருதி, தி என, வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்; உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும் களைகணைத் தொழ, அவன் கண்ணின் கூறினான் (10029) என்ற இப்பாடலின் 3வது அடியில் உள்ள கண்ணின் கூறினான் என்ற தொடர், இது ஒரு நாடகம் என்பதை இளையவனுக்கு இராகவன் உணர்த்தினான் என்று பொருள் கொள்ளுமாறு நிற்கிறது. கம்பநாடனுடைய காவியத்தில் வரும் பிராட்டியின் அக்னிப் பிரவேசம் ஏனைய இராமாயணங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருப்பதைக் காணலாம். மனவியலை நன்கு அறிந்த கவிஞனே இத்தகைய தொரு சூழ்நிலை உருவாக்கி, அதனை அக்னிப் பிரவேசத்தில் முடிக்க முடியும். அடுத்துள்ள திருமுடிசூட்டு படலத்தில் முடிசூட்டலைக் கூறும் கவிஞன் பாடியுள்ள அரியணை அனுமன் தாங்க என்ற பாடல் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இப்பாடலின் தனிச் சிறப்பு என்னவென்றால், முடிசூட்டப்பட்டவன் பெயரைக் குறிக்காமலேயே வசிட்டனே புனைந்தான், மெளலி என்று முடிக்கிறான் கவிஞன். முடிசூட்டப்பட்டவனைச் சுற்றி நிற்பவர்கள் வரிசையாகக் கூறப் பெறுகிறார்கள். அரியணை அனுமன் தாங்கினான்; பரதன் வெண்குடை கவித்தான்; இருவரும் இலக்குவ, சத்ருக்கனர்) கவரி வீசினர். அங்கதன் உடைவாள் ஏந்தினான்; இவர்களுக்கு இப்பணி வழங்கப்பட்டதன் துணுக்கத்தைக் காண்டல் வேண்டும். அகங்கார, மமகாரங்கள் அறவே செற்று இராம பக்தி சாம்ராஜ்ஜியத்தில் மூழ்கித் தங்களையே இழந்தவர்கள் அனுமன், பரதன் என்ற இருவருமாவர். அதிலும் பக்தியோடு தொண்டும் கலந்த முழுவடிவம் அனுமன். அவன் அரியனைத் தாங்கினான் என்றால் இராமன் ஆட்சி என்பது.தொண்டு என்ற அடித்தளத்தின்மேல் அமைந்துள்ளது என்று அறிய முடியும், தன்னலமற்ற பக்தியில் திளைத்தாலும் ஆயிரம் இராமர்கட்குச் சமமானவன் என்று மற்று ஒர் அன்பே