பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 கம்பன் எடுத்த முத்துக்கள் பேர் உதவிக்கு யான் செய் செயல்பிறிது இல்லை:

  • . - .* பைம்பூண் போர் உதவிய திண்தோளாய்! பொருந்துறப் புல்லுக!

என்றான். (10351) இப்பாடலில் உள்ள புதுமையையும்,நுணுக்கத்தையும் சிந்திக்க வேண்டும். தமிழ்நாட்டு மரபுப்படி ஒருவரை ஒருவர் தழுவும் பொழுது, தழுவினவர் ஆளுமை மிக்கவர் என்றும் தழுவப்பட்டவர் ஒருபடி குறைந்தவர் என்றும் கருதுவது இயல்பு இராமன் அனுமனைத் தழுவி யிருந்தால் மிகச் சிறப்புடைய செயல் மரபுக்கு ஒத்ததாகும். ஆனால், "அனுமனே! நீ என்னைப் பொருந்துறப்புல்லுக!" என்று. பேசுகிறான் தோசல நாடுடை வள்ளல். இன்றுவரை சீதைக்கும், இலக்குவனுக்கும், பரதனுக்கும் உரியனவாக இருந்த அத்தோள்கள் அவர்களைப் புல்லினவே தவிர, அவர்களால் புல்லப்படவில்லை. தொண்டின் பரிணாமமாக விளங்கும் அனுமனைப் பார்த்து, நீ என்னைப் புல்லுக என்று. இராகவன் கூறும்பொழுது, தன்னைவிடத் தன் நாமத்தையே ஜெபிக்கும். அகங்கார, மமகாரங்களற்ற தொண்டனாகிய அனுமனை ஒருபடி உயர்த்திவிடுகிறான். இராகவன் பரம்பொருள் ஆதலின், தொண்டனை, பக்தனை என்னைப் புல்லுக என்று சொல்லும் பொழுது ஒரு தொண்டனின் பிடியில் பரம்பொருள் அகப்பட்டுக்கொள்ளுகிறான். குறியீட்டு முறையில் சொல்வதானால், பக்தனின் இருதயத்துக்குள், பரம்பொருள் புகுந்துவிட்டான் என்பதையே இது குறிக்கிறது. 'அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே" என்று வள்ளலாரும் "பக்தி வலையிற் படுவோன் காண்க என்று மணிவாசகப் பெருந்தகையும் "இறைவனோ தொண்டர் உள்ளத்து அடக்கம்" என்று ஒளவையும் கூறியது எவ்வளவு பொருத்தமானது என்பதை அறியமுடிகிறது. யுத்த காண்டத்தில் இன்னும் ஆராயப்படவேண்டிய பகுதிகள் பற்பல இருப்பினும், இடமின்மை கருதி இத்துடன் நிறுத்தவேண்டியுள்ளது. இந்த ஒரு காண்டத்தைமட்டும்