பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 35 பொறுத்தமட்டில் முழுவதும் கம்பனை மகனாகவே ஏற்றுக் கொண்டு அற்புதமாக வளர்த்தார் என்பதில் ஐயப்பாடு இல்லை. அந்த நன்றிப் பெருக்கைக் கடைசிவரை கம்பன் மறக்கவும் இல்லை. என்னதான் இருந்தாலும் கம்பனுடைய அடிமனத்தில் ஒரோவழி இந்த எண்ணம் தோன்றித்தான் இருத்தல் வேண்டும். 'தன்னுடைய காலில் நிற்க முடியாமல் தன்னுடைய குடும்பத்தார் தன்னைத் தனிப்பட்ட முறையில் சுதந்திரமாக வாழவைக்க வாய்ப்பு இல்லாத காரணத்தினால்தானே சடையப்பரைப் போன்ற வள்ளலை அண்டியிருக்க வேண்டியிருக்கிறது என்ற மன நெருடல் எற்பட்டிருக்க வேண்டும். இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? உடையார், இல்லார் என்ற இரண்டு பெரும் பிரிவாகச் சமுதாயம் அமைந்திருந்ததுதான் காரணம். - இந்த நினைவு ஆழமாகப் பதியப் பதியப் பெரும் கவிஞனாகிய அவன், இந்த உடையார் - இல்லார் என்கிற வேறுபாட்டோடு கூடிய சமுதாயத்தில் வாழும்போதே, 'இதெல்லாம் இல்லாத ஒரு சமுதாயம் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் திளைத்திருக்க வேண்டும். அப்படி அவன் கனவு கண்டதனுடைய விளைவுதான் நாட்டுப் படலத்தில் அவன் அமைத்திருக்கின்ற சமுதாயம், இக்கருத்தோடு கம்பன் கோசல நாட்டை எப்படி வருணிக்கிறான் என்பதைப் பார்க்கும்போது வியப்பு ஒன்றும் தோன்றுவதில்லை. - இன்னும் சொல்லப்போனால் வால்மீகி கோசலத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். - * ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவம் மாந்தி மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியல் உற்றேன் - (32) எனக் கம்பன் தனக்கு மூல நூலாகக் கொண்டதாகக் குறிப்பிடும் வான்மீகத்தில் கோசலம் என்ற பெயர்