பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. கம்பன் எடுத்த முத்துக்கள் சொல்வதைத் தவிர வேறு எந்த விதமான வருணனையும் வால்மீகி முனிவர் செய்யவில்லை. அந்த ஒரு சொல்லை வைத்துக்கொண்டு ஒரு புதிய நாட்டைக் கற்பனை செய்கின்றான் கம்பன் என்றால், ஆழமானதுண்டுதல் ஒன்று ஏதேனும் இருந்திருக்க வேண்டும். அந்தத்துண்டுதல்தான் அவன் சமைக்கக் கருதிய கற்பனைச் சமுதாய அமைப்பைத் தமிழர்களுக்கு அறிவுறுத்தியது. அன்றைய நிலையில் வறுமையுடைய மக்கள் தங்கள் பிள்ளைகளைக்கூட விற்கத் தயாராக இருந்தார்கள் என்பதைப் பெரிய புராணத்திலிருந்து அறிகிறோம். 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரஞ்சோதியார் - பின்னர்ச் சிறுத் தொண்டர் என்று புகழ்பெற்ற பெருமகனார் . தம்முடைய மகனை அரிவதற்கு முன்னர் மனைவியிடம் பேசுவதைச் சேக்கிழார் அற்புதமாக எடுத்துக் காட்டுகிறார். (சிறுத்தொண்டர் 56) மைந்தர் தமை நினைவு நிரம்ப நிதிகொடுத்தால் தருவாருளரே என்று சொல்கிறார். ஆகவே, நிரம்பப் பொருள் கொடுத்தால் தங்கள் பிள்ளைகளை விற்கத் தயாராக இருந்தார்கள் என்று அறிகிறோம். - இதற்கு முன்னர், வடநாட்டில் வழங்கும் கனச்சேபன் கதை இதை நன்கு வலியுறுத்துகிறது. நரபலி இடுவதற்காக ஒரு பிள்ளை வேண்டும் என்று அம்பரீடன் என்ற அரசன் பெரும்பணத்தைக் கொடுத்துப் பிள்ளை வாங்கப் புறப்படுகிறான். மூன்று பிள்ள்ைகளை யுட்ைய இரிசிகன் தன் முதல் பிள்ளையையும், அவன் துணைவி தன் கடைசிப் பிள்ளையையும் தாங்கள் வைத்துக்கொண்டு இடையில் நின்ற சுனச்சேபனைப் பொருளுக்கு விற்றுவிட்டார்க்ள் என்று அறிகிறோம் (கம்பன் 599 - 60ர ஆகவே, உடையார் - இல்லார் இருக்கிற சமுதாயத்தில் இப்படிப்பட்ட குறைப்ாடுகள் இருந்துதான் தீரும். . . . . . இவற்றையெல்லாம் மனத்தில் வாங்கிக்கொண்ட கம்பநாடன் இவற்றுக்கு ஒரு முடிவு கட்டவேண்டு மென்று நினைத்தான் போலும், ஆகவே, தான் பாட எடுத்துக் கொண்ட காப்பியத்தில் கோசல நாட்டில் இப்படி ஒரு