பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கம்பன் எடுத்த முத்துக்கள் பல பாடல்களில் இயற்கை வருணனையை ஈடு இணையின்றிப் பேசுகிறான் கம்பன் என்பதனை அறிவோம். அவற்றுள் இரு பாடல்கள் நம் சிந்தனையைத்துண்டுவனவாக 2, 6/sosroof. . * . . சேல் உண்ட ஒண்கணாளில் திரிகின்ற செங்கால் அன்னம் மால் உண்ட நளினப் பள்ளி, வளர்த்திய மழலைப் பிள்ளை கால் உண்ட சேற்றுமேதி கன்று உள்ளிக் கனைப்பச்

  • . . . சோர்ந்த பால் உண்டு துயில, பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை'

'ஈரநீர் படிந்து இந்நிலத்தே சில கார்கள் என்ன வரும் கருமேதிகள் ஊரில் நின்று கன்று உள்ளிட மென்முலை - தாரை கொள்ளத் தழைப்பன சாலியே (44, 56) இவ்விரு பாடல்களும் நாட்டு வாழ்க்கையில் ஒரு சிறப்பான பகுதியைக் குறிக்கின்றன. மேய வந்த எருமைகள், நன்கு மேய்ந்த பிறகு ஊரில் உள்ள தம் கன்றுகளை நினைக்கின்றன. அந்நினைவு தோன்றியவுடன் அவற்றின் மடியிலிருந்து பால் சுரக்கின்றது. இவ்வாறு ஒழுகிய பால் அன்னத்தின் மழலைப் பிள்ளை உண்பதற்கும், சாலி நெல் நன்கு தழைத்து வளர்வதற்கும் காரணமாக அமைகின்றது. - . . ஆனால், சாலியும், அன்னக் குஞ்சும் பயன்படுத்து வதற்காக அவ் வெருமைகள் இப்படிப் பாலைத் தரவில்லை. எங்கேயோ இருக்கின்ற கன்றை நினைத்ததால் கரந்த பால் எருமையோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத நெல்லுக்கும் அன்னக் குஞ்சுக்கும் பயன்படுகிறது என்று கவிஞன் பாடுவது வெறும் கற்பனையாகமட்டும் தோன்றவில்ல்ை சமுதாயத்தில் மேட்டுக் குடியினராகிய பெருவணிகர், பெருந் தொழிலதிபர் என்பவர்கள் ஒரு வணிகத் தொழிலையோ தொழிற்சாலையையோ தொடங்கி நடத்துகிறார்கள் என்றால், அது. அவர்களும் அவர்கள்