பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 57 இல்லவே இல்லை. ஆகவே, காப்பியத் தலைவன் புனல் விளையாட்டு, முதலானவற்றில் ஈடுபட்டான் என்று பாடுவது தான் காப்பியம் என்றால், அதற்கு இங்கே இடமில்லை. பின்னே ஏன் இதை இங்கே சேர்க்கின்றான்? ஏதோ ஒரு கால கட்டத்தில் மக்கள் மனத்தில் ஒரு கிளுகிளுப்பை உண்டாக்க வேண்டும் என்று இந்த நான்கைந்து படலங்களையும் பாடியிருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. அதுமட்டு மன்று, பல்லவ சாம்ராஜ்யம் மிகப் பெரிதாக வளர்ந்திருந்த நிலையில் மற்றது எப்படி இருந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் ஒர் இன்ப வாழ்க்கை. இன்ப வேட்டையில் புகுந்துவிட்டார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. - அதுபோலச் சோழர்கள் காலத்திலும் அது தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது. ஆகவே, மக்கள் குறிக்கோள் இல்லாமல் இன்பு வேட்டையில் தலைதெறிக்கச் செல்லுகின்ற சூழ்நிலை அப்போது இருந்திருக்க வேண்டும். அதைப் பிரதிபலித்துக் காட்டுகின்றவன்போல இங்கே தமிழ் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைக் கோசல மக்களைக் காட்டுவதன் மூலம் கம்பன் காட்டினானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அன்றியும்,காப்பியத் தலைவனாகிய இராமன் தாதை தயரதன் பல மனைவியரை மணந்து இன்ப வாழ்க்கை வாழ்ந்தான் என்று அறிகிறோம். - -- கருத்து முற்றத் தோய்ந்தே கடந்தான் திருவின் தொடர் போக பெளவம் (172) என்று கம்பன் பாடிவிட்டான். ஆகையால், செல்வரில் சிலர் இப்படியும். வாழ்ந்தனர். என்று எடுத்துக்காட்ட இப் படலங்களை அமைத்தானோ என்று நினைப்பதில் தவறில்லை. - இம்மாதிரி அவர்கள் வாழ்ந்ததனால்தான் 7ஆம் நூற்றாண்டில் தோன்றிய அப்பர் பெருமான் தமிழ்நாடு முழுவதையும் சுற்றிப்பார்த்துவிட்டு, மக்கள் தேனும் பாலும் பெருக்கெடுத்து ஒடுகின்ற முறையிலே மிகச் சிறப்பாக வாழ்கிறார்கள். ஆனால், என்ன பயன்? குறிக்கோள்