பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கம்பன் எடுத்த முத்துக்கள் கொள்கிறார்கள். எனவே, மந்திரப் படலத்தைப் பொறுத்த மட்டில் கதை சுமுகமாகத்தான் போகின்றது. இனி, மந்தரை சூழ்ச்சிப் படலம்' என்பது அடுத்து நிற்பதாகும். இந்த மந்தரை என்ற பாத்திரம் ஒரு விநோதமான பாத்திரமாகும். அவளுடைய நிலை என்னவென்றால், கைகேயியுடன்கூட அவளது பிறந்தகத்திலிருந்து வந்த பணிப் பெண்தான். பணிப் பெண்ணாக இருக்கின்ற ஒருத்தி ஒரு மாபெரும் சூழ்ச்சியைச் செய்து, இராம காதையையே திசை மாற்றம் செய்கின்ற அளவுக்கு, ஒரு பெரிய காரியத்தைச் சாதிக்கின்றாள் என்றால், அது நம்முடைய மனத்தில் எளிதில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. அதுமட்டுமல்ல, "அரசர் இல் பிறந்து, பின் அரசர் இல் வளர்ந்து அரசர் இல் புகுந்து, பேர் அரசி” (1467) யாக இருக்கின்ற கைகேயியின் மனத்தைக் கேவலம் ஒரு பணிப் பெண் மாற்றிவிட்டாள் என்று சொல்வதைக், கம்பனும்கூட ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. மந்தரை துணைக் காரணமாக இருந்தாள். இந்த மாபெரும் காரியம் நடைபெறுவதற்கு அடிப்படையாக இருந்தாள்' என்பது தவிர, கைகேயியின் மனமாற்றம் கேவலம் கூனியினால் ஏற்பட்டதல்ல என்பதை அறுதியிட்டுக் கூறுபவன் போலக், கம்பன் பேகவான், "அரக்கர் பாவமும், அல்லவர் இயற்றிய அறமும் துரக்க, நல் அருள் துறந்தனள் தூ மொழி மடமான்' (484) என்பதாக . . . . . . - கைகேயியின் மனம் திரிந்தது என்றால், அது கேவலம் கூனியினுடைய சூழ்ச்சியால் அன்று. அரக்கருடைய பாவமும், அல்லவர்களுடைய தவமும் சேர்ந்து கைகேயியின் மனத்தை மாற்றின என்று சொல்லுகின்ற முறையில் கைகேயியினுடைய பாத்திரப் படைப்பை மிக உயர்த்திவிடுகின்றான் கம்பநாடன். கூனியைப் பொறுத்தமட்டில் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க முடிகின்றது. ஒரு சிலர் எக்காரணமும் இல்லாமல் பிறருக்குக்