பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - கம்பன் எடுத்த முத்துக்கள் கைகேயியின் அடி மணத்தில் வேலை செய்யத் தொடங்கிவிட்டது. பரதன், கேகய நாடு என்ற இரண்டையும் கூளி சொல்லியவுடன் கைகேயிக்குச் சுல்க்க நிகழ்ச்சி நினைவுக்கு வந்துவிட்டது. இதன் பிறகு கூனியின் பேச்சுகள் அனைத்தும் கைகேயியின் காதில் விழுந்தனவே தவிர மனத்தில் புகவில்லை. அறிந்தோ அறியாமலோ தன் எஜமானியாகிய கைகேயியின் மனத்தில் முழுவதுமாக மறக்கப்பட்ட கன்யாசுல்க்க நிகழ்ச்சியை நினைவூட்டி விட்டாள் கூனி "பரதனைப் போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால்" என்ற தொடர் காதில் விழுந்ததி லிருந்து கைகேயியின் மனம் ஆழமாக வேலை செய்யத் தொடங்கி விட்டது. வாக்குறுதியை மறந்து எதிர்வழி செல்லும் கணவனைக் காக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்த கற்பரசியாம் கைகேயி எப்படிக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள். கன்யா சுல்க்கத்தை அவனுக்கு நினைவூட்டி யிருக்கலாம், அவ்வாறு செய்தால் தசரதன் அது வரையில் செய்ததெல்லாம் பெருஞ் சூழ்ச்சிகளாக முடிந்துவிடும். பெரும் பழி அவனுக்கு ஏற்றப்பட்டுவிடும். அப்படியுமில்லாமல், (கன்யா சுல்க்கத்தையே நின்ைவூட்டாமல்) என்ன காரியத்தைத் தசரதன் செய்ய வேண்டுமோ அதைத் தான் பெற்ற வரத்தின் மூலமாகச் செய்து கொண்டவளாகக கைகேயியைக் கம்பன் படைத்துக் காட்டுகிறான். இவ்வாறு செய்ததால் தசரதனுடைய பெயர், குற்றத்தி லிருந்து விடுவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் எவ்விதக் குற்றமும் செய்யாத கைகேயியின் பெயர் மண்ணில் ஆழ்த்தப் படுகிறது. இதனை நன்கு அறிந்திருக்கின்றாள் விக்கேயி என்பதில் ஐயமே இல்லை. - - - - - இறுதியாகத் தசரதன் 'நீ உன்னுடைய முடிவிலிருந்து மாறவில்லையானால் நான் இறந்துவிடுவேன்' - "உன் கழுத்தின் நாண், உன் மகற்குக் காப்பின் நாண் . . . . . . . ஆம்" (1653)