பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கம்பன் எடுத்த முத்துக்கள் யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ நீதி எற்கு என நினைந்தும் அப்பணி தலைநின்றான்." (1382) என்கிறான், கவிச்சக்கரவர்த்தி, கடன் இது என்று உணர்ந்தும் (1882) என்பதற்கு மூத்த மகனாகிய தனக்கு இது கடமை என்று உணர்ந்தான் என்று பொருள் கூறினால் உணர்ந்தும், என்பதில் உள்ள உம்மை பொருள் அற்றதாகிவிடும். உணர்ந்தும் என்பதற்கு வேறு ஒன்றைச் செய்வதுதான், அதாவது பரதனுக்குப் பட்டத்தைத் தருவதுதான் கடமை என்பதை உணர்ந்தும், அரசன் ஆணையை மறுக்க அஞ்சி ஏற்றுக் கொண்டான் என்று பொருள் கொள்வதுதான் பொருத்தமுடையதாகும். இவ்வாறு இல்லாமல் மூத்தவனாகப் பிறந்ததால் முடிசூட வேண்டியது தனது கடன் என்று உணர்ந்துகொண்டான் என்று பொருள் கூறினால் வரும் இடையூற்றைச் சிந்திக்க வேண்டும். இதுதான் தன் கடன் என்று உணர்ந்த பிறகு அரசன் ஏவலின்படி நடப்பதுதான் தனக்கு நியதி என்று பொருள் கூறினால் பின் இரண்டடிகள் அர்த்தமற்றுப் போவதைக் காணலாம். "கடன் இது என்று உணர்ந்தும்" - (1382) என்ற சொல்லுக்கு வேறு பொருள் காண்டல் தேவைப் படுகிறது. கடன் இது என்று உணர்ந்தும்' என்றால் தசரதன் செய்தது அவ்வளவு சரியில்லை. பரதனுக்குத்தான் இப் பட்டம் உரியது என்று உணர்ந்தான். உணர்ந்தும் உணர்ந்து விட்ட பிறகு இரண்டு வகையில் இராகவன் செயல்படக் கூடும். - - - - ஒன்று, தந்தை என்ற முறையிலே உறவு வைத்துக்கொண்டு, தந்தையைப் பார்த்து,"தாங்கள் செய்வது அவ்வளவு சரியாக இல்லை. இப்பட்டம் பரதனுக்கே உரியது" என்று கூறி மறுத்திருக்கலாம். அது ஒருவகை, இராகவன் அவ்வாறு செய்யவில்லை. மறுத்துப் பேசுவதற்கும் தசரதன் வாய்ப்பே கொடுக்கவில்லை. எனவே, அடுத்த வழி என்ன? ""க்ரவர்த்தியின் ஆணை எதுவோ அதனைக் கேள்வி கேட்காத