பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் - 85 பூமியைப் பரதனுக்குப் பெற்றுக்கொடுத்தார். இவ்வாறு செய்ய வில்லை என்றால் சுல்க்கத்தைத் திருப்பி எடுத்துக்கொண்ட பாவத்திற்குத் தசரதன் ஆளாக நேரிடும். கைகேயியின் பாத்திரத்திற்கு மெருகூட்டுவதாகும் இப்பகுதி தசரத குமாரன் அவ்வாறு பேசியவுடன் அது எப்படி: என்று பரதன் கேட்டதாக இல்லவே இல்லை. அதற்குப் பதிலாக நீ பிறந்துவிட்ட காரணத்தால் இந்த அரசு உனக்குச் சொந்தமானது என்று இராகவன் சொன்னதை ஏற்றுக் கொள்கிறான் பரதன். அதுதான் ஆச்சரியம், முன்னர் வந்து உதித்து உலகம் மூன்றிலும் நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார் என்னது ஆகில் யான் இன்று தந்தனென் மன்ன! போந்து நீ மகுடம் சூடு (2486), என்று பேசுகிறது கம்ப ராமாயணம், இராகவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு, "நான் அரசன்தான். இப்போது நான் ஆணையிடுகின்றேன். நீ போய் ராஜ்யத்தை ஆள்வாயாக" என்று பரதன் கூறும்போது இராமன், பரதன் ஆகிய இருவருமே இந்தக் கன்யா சுல்க்கக் கதையை ஏற்றுக்கொண்டு அதற்கு வழி செய்கின்றார்கள் என்பதை அறிய முடிகின்றது. இப்படி வெளிப்படையாகச் சொல்லாமல் அதனை யார் யார் அறிந்திருக்க வேண்டுமோ அவர்களெல்லாரும் அறிந்திருந்தார்கள் என்று குறிப்பாகக் கவிச்சக்கரவர்த்தி கதையைக் கொண்டுசெல்லுகின்ற முறையில் பற்பல வெற்றிகளைப் பெற்றுவிட்டான் என்றுத்ான் சொல்ல வேண்டும். தசரதனைப் பழிக்கு ஆளாக்காமல், வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்தவனாகச் செய்துவிட்டாள் கைகேயி, -- "படர் எலாம் படைத்தாளை, பழி வளர்க்கும் செவிலியை" என்று பரதன் கூறினாலும் உண்மையில் அத்தகையவள் அல்லள் அவள், மாபெருந் தியாகத்தைச் செய்த ஸ்திதப்பிரக்ளு மனோ நிலையில் உள்ள ஞானியாக அவளை ஆக்கிப் படைத்துவிட்டான். அந்த அடிப்படையில் அவள் மனமாற்றத்தைக் குறிக்கவந்த கவிஞன்,