பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 89. என்று கண்ணப்பரைப்பற்றிச் சேக்கிழார் பின்னே 12ஆம் நூற்றாண்டில் பாடுவார். அந்தப் பாடலுக்கு முழு இலக்கணமாக முன்னர்க் குகனை வகுத்துவிட்டான் கவிச் சக்கரவர்த்தி கம்பநாடன்: - . . . குகன் என்ற பாத்திரம் மறுபடியும் விடைகொடுத்த படலத்தில்தான் காணப்படுகிறது என்றாலும், மறக்க முடியாத பாத்திரமாக தசரதனுடைய பிள்ளைகள் நால்வரும் வளர்ச்சி அடைந்து ஐவராக வளர்வதற்கு முதல் இடம் கொடுத்தவனாக - அமைகின்றான். குகன், என்ற பாத்திரம் அயோத்தியா காண்டத்தில் அமைந்துள்ள அற்புதமான ஒரு படைப்பு கல்வி கேள்வி. அரசியல் துணுக்கங்கள் ஆகியவற்றை அறியாதவனாகிய குகன் பரதனுடைய சேனை வருகிறது என்று கேள்விப்பட்டவுடன் - - "ஆழ.நெடுந் திரை ஆறு கடந்து இவர் போவாரோ?" - . . . . (2317) என்று சினக்கின்றான். - இப்படி முன்பின் தெரியாத ஒருவனிடம் பகை கொள்ளக் காரணம் யாது என்று சிந்தித்தல் வேண்டும். - - - குகனைப் பொறுத்தமட்டில் பரதனை முன் அறியாதவன், ஆனால், பரதன் என்ற பெயருடைய ஒருத்தன் சூழ்ச்சியின் விளைவாக அரசைப் பிடுங்கிக்கொண்டு இராகவுணைக் காட்டிற்கு அனுப்பிவிட்டான் என்ற எண்ணத்தில் குகன் இருக்கிறான். இந்த எண்ணம் அவனுடைய மனத்தில் எப்படித் தோன்றிற்று, இதற்கு யார் காரணம்' என்று ஆராய்வோமேயானால் கம்பநாடன் அயோத்தியா, காண்டத்தில் அதற்கு இடம் வகுத்துத் தருகின்றான். இராகவனும் பெருமாட்டியும் உள்ளே உறங்க, வெளியே இளைய பெருமாள் காவல் காத்துக்கொண்டு நிற்கின்றான். அவனோடு உடன் நிற்கின்றான் குகன். அந்த நிலையில் இராகவன் எப்படி அரசைத் துறந்து வந்தான் என்று கேட்க, இலக்குவன் சொல்கிறான். ---,