பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கம்பன் எடுத்த முத்துக்கள் முன்கோபக்கார னாகிய இலக்குவன் பரதனை இன்னான் என்று புரிந்துகொள்ளவில்லை. புரிந்து கொள்ள முயலவும் இல்லை. அதற்குப் பதிலாகக் கைகேயியின் சூழ்ச்சியில் அவனும் ஒரு பங்குதாரன் என்றுதான் நினைத்திருந்தான். ஆகவே, தன்னுடைய மனத்தில் தோன்றிய கசப்புணர்ச்சியைப் - பரதன் மாட்டுக் கொண்ட காழ்ப்புணர்ச்சியை - கோபத்தை முழுவதுமாகக் குகனிடம் விளக்கிவிட்டான். அதனால்தான் பரதனைப்பற்றி முன்பின் அறியாதவனாகிய குகன், இந்தப் படத்தைத் தன் மனத்தில் வைத்துக்கொண்டிருக்கிறான். ஆகவே, "ஆழ நெடுந் திரை ஆறு கடந்து இவர் போவாரோ" என்று. சினக்கின்ற சூழ்நிலை உருவாகின்றது. ஆயினும், தன்னைக் காண வருகின்ற பரதனைத் தூரத்தில் இருந்து பார்த்தபோது, பரதன் அணிந்திருக்கிற தவக் கோலத்தையும், அவன் முகத்தில் தேங்கியிருக்கின்ற துக்கத்தையும் பார்த்தபோதே "நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான், அயல், நின்றான் தம்பியையும் ஒக்கின்றான்" - (2332) என ஒரளவு பரதனை அடையாளம் காணக்கூடிய சூழ் நிலைக்கு வந்துவிடுகின்றான். பரதனைப் பற்றி அவன் கேள்விப்பட்டதை வைத்துக் கொண்டு பரதன் எத்தகையவனாக இருத்தல் வேண்டும் என்று நினைத்திருந்த நினைவுக்கும், நேரிடையாகத் தான் பரதனைக் காணும்போது மனத்தில் தோன்றிய நினைவுக்கு முள்ள மாறுபாட்டை நன்கு உணர்ந்துவிட்டவ னாகிய குகன் உடனே "எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு" . . - (2332) என்று பேசுகின்றான். அதுமட்டு மல்ல. பின்னர்ப் பரதனோடு உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில், அவனுடன் இருந்து பரதனுடைய