பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 95 முடிகின்றது. அன்பின் எல்லையில் நிற்கின்றவனும் மாபெரும் தவற்றைத் தசரதன் இழைத்துவிட்டான், அதை எப்படியாவது போக்க வேவண்டுமென்கிற முடிவோடு இருக்கின்றவனும் - அது முடியாவிட்டால் இராமனைப் போலத் தவக்கோலம் பூண்டு காட்டிலே தங்கிவிட வேண்டும் என்ற முடிவோடு வந்தவனு மாகிய பரதன் ஒரு புறம், அமைதியே வடிவாக நடப்பனவற்றையெல்லாம் சாட்சி மாத்திரையாகப் பார்த்துக் கொண்டு, இடையே வருவனவற்றுக்கு எவ்விதத் தடையும் செய்யாமல் ஆருயிர் முறைவழிப்படுஉம்' என்று கருதும் இராமனையும் ஒருசேரக் காணுகின்றோம். தசரதன் இறந்தது முதலான செய்திகளை யெல்லாம் கேட்டு ஒருவாறு ஆறுதல் அடைகிறான் இராகவன். அடுத்துப் பரதனை நோக்கி 'இந்தத் தவக்கோலம் பூண்டு நீ ஏன் வந்தாய்! நீ அரசாள வேண்டியவன் அல்லவோ?" என்று கேட்கின்ற கேள்வியும் அதற்குப் பரதன் தருகின்ற விடையும், அந்த விடையில் இராகவனே சிக்கிக்கொள்வதையும் காண்கின்றோம். 'நீ பிறந்ததனால் இந்தப் பூமி உனக்குச் சொந்தம். ஆகவே, இதனை ஆள்வாயாக’ என்று இராகவன் சொல்லிய வுடன், அதனை அப்படியே ஏற்றுக்கொள்கிறான் பரதன். ஆம், இப்போது நான் சக்கரவர்த்தி. சக்கரவர்த்தியாகிய நான் உன்னைக் கேட்டுக்கொள்கிறேன். நீ வந்து ஆட்சி செய்வாயாக’ என்று தானே அரசன் என்ற முறையிலே ஆணையிடும் பரதனைப் பார்த்து இராகவன் நெகிழ்ந்து விடுகிறான். . . "ஐய! சரி, உன்னுடைய ராஜ்யத்தை இப்போது நீ எனக்குத் தந்துவிட்டாய் அல்லவா? நான் இப்போது சக்கரவர்த்தியாகிவிட்டேன். இப்போது நான் சொல்வதை நீ கேட்பாயாக பதினான்கு ஆண்டுகள் முடிந்து நான் திரும்புகிற வரையில் எனக்காக நீ இருந்து ஆட்சி செய்வாயாக" என்று சொல்லுகின்ற அந்த உரையாடலைப் பார்க்கும்போது சேக்கிழார் கூறும், . . -