பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கம்பன் எடுத்த முத்துக்கள் "அளவிலாப் பரிவினால் வந்த இடுக்கண்' . . . . . . (பெ.பு. எறிபத்தர்-47) என்ற தொடர் நினைவிற்கு வருகிறது. எல்லையில்லாப் பரிவினால் இவர்களின் இடையே நடைபெறுகின்ற உரையாடல், கற்பவர் மனத்தைக் கரைத்துவிடுவதைக் காண்கின்றோம். . . . . தேவர்கள் குறுக்கிட்டுப் பரதனைப் பார்த்து, நீநாட்டைச் சென்று ஆள்வாயாக இராகவன் தன் தந்தை சொல்லைப் புரக்கும் கொள்கையுடையவன்' (2505) என்று சொல்லுகின்ற வரையில் பரதனை அமைதிப்படுத்த முடியவில்லை. அந்த நிலையில் வேறு வழியில்லாமல் அரசை ஏற்றுக்கொள்ளுகிற பரதன், இராமனைப் பார்த்து, "நான் உன் ஆணையின்படி செல்லுகிறேன். நீ உன் திருவடியைத் தரவேண்டும். உன் திருவடிதான். ஆட்சி செய்யும். அதன் பிரதிநிதியாக நான் இருந்து 14 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பை நடத்துகிறேன்" என்று சொல்லும்போது பரதனது புதிய பரிமாணத்தைக் காணமுடிகின்றது. ‘. . .. r அயோத்தியா காண்டத்தி னிடையே காட்சி தருகிற பரதன் எல்லையற்ற வேகத்தோடு வளர்வதையும், வளர்ந்து இறுதியாக ஆயிரம் இராமரும், அவனுக்குச் சமமில்லை என்று சொல்லுகினற புதய பரிமாணததை அடைகின்றதை யும் அயோத்தியா காண்டத்திலேயே பார்த்துவிடுகின்றோம். பரதனின் முழு வளர்ச்சியைக் காட்டுவது அயோத்தியா காண்டமாகும். இவ்வளவு வளர்ச்சி பெற்றுவருபவனைப் பின்னே வரும் காண்டங்களில் காட்டாமல் இறுதிவரையில் கம்பன் கொண்டுசெலுத்துகிறான் என்றால், அது மிகமிகக் கடினமான ஒன்றாகும். இதே வளர்ச்சிப் போக்கில் நந்திக்கிராமத்தில் சென்று, ஆமைபோல் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, சர்வ பரித்தியாகம் செய்து, இராகவன் ஆணையைச் சிரமேற்கொண்டு வாழ்கின்ற தீவிர பக்தனாக விருப்பு, வெறுப்பு அற்றவனாக கடமையைச் செய்பவனாகப் பரிணமிக்குமாறு கம்பன் படைக்கின்றான்.