பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் தமிழும் 585 "அங்கு நின்றெழுந்து அயன் முதல் மூவரும் அனையாா, செங்கண் ஏற்றவன் செறி சடைப் பழுவத் தின் நிறைதேன் பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால் பொன்னியைப் பொருவும் கங்கை என்னும் அக்கரை பொரு திரு நதி கண்டார்.” பொன்னியைப் போன்ற கங்கை என்னும் இரு கரை பொருந்திய திருநதியைக் கண்டனர் என்று கம்பர் கூறுகிறார். விசுவாமித்திர மாமுனிவர் இராம இலக்குவர்களை அழைத்துக் கொண்டு மிதிலைக்குச் செல்கிறார். மூவரும் மிதிலை நகரை அடைந்தனர். மிதிலை நகரின் அழகைக் காண்கின்றனர். அந்நகரின் மாடவீதிகளையும் அரண்மனை மதில் களையும் கண்டு களிக்கின்றனர். கடை வீதிக்கு வருகின்றனர். அக்கடை வீதி எப்படி இருக்கிறது? அதைக் கம்பன் விரிவு படக் கூறுகிறார். ஏராளமான பொருள்களைக் கொண்ட பல கடைகளும் இருந்தன. அந்தக் கடைகளில் மணிகளும், பொன்னாலான பொருள்களும், ஆரமும் கவரி வாலும் அகிலும் மயில் தோகைகளும் யானைத் தந்தங்களும் மற்ற பொருள்களும் நிறைந்திருந்தன. இந்தக் கடைகள் ஏராளமான பொருள்களை அள்ளிக் கொண்டு வரும் காவிரி நீரிப் பெருக்கைப் போன்றிருந்தது என்று கம்பன் கூறுகிறார். ஆற்றில் புது வெள்ளம் வரும் போது அவ்வெள்ளம் பலவிதமான பொருள்களையும் அள்ளிக் கொண்டு வருமல்லவா? அதை ஒப்பிட்டுக் கம்பன் மிக அழகாகப் பேசுகிறார். “வரப்பு அறுமணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும் சுரத்திடை அகிலும் மஞ்ஞைத் தோகையும் தும்பிக் கொம்பும் குரப்பு அணை நிரப்பும் மன்னர் குவிப்புறக் கரைகள் தோறும் பரப்பிய பொன்னி அன்ன ஆவணம் பலவும் கண்டார்”