பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйusйr — «PG5 ~Qрғылшй шптіsosv_—зу. «Foofkалғай! 592 தமிழ் முனிவன் அகத்தியனை இராமன் வணங்கினான். முனிவனும் இராமனுக்கு நல்வரவு கூறினான். இங்கு அகத்தியனைப் பற்றிக் குறிப்பிடும் போது “என்றும் உள. தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்” என்று கம்பன் சிறப்பித்துக் கூறுகிறார். தமிழ் மொழி என்றும் நிரந்தரமாக நிலை கொண்டுள்ள மொழியாகும். அத்தென் தமிழை இலக்கணத்துடன் இசைத்தவன் அகத்திய முனிவன். தமிழ் மொழியின் இலக்கணத்திற்கு ஒரு தனித் தன்மையும் தனிச் சிறப்பும் உண்டு. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து அங்கங்களையும் கொண்டது தமிழ் இலக்கணமாகும். அகத்தியன் இராமனை வரவேற்று நல்வரவு கூறித் தன் சோலையிலேயே தங்கும்படி கூறுகிறான். இங்கு எல்லா வசதிகளும் உள்ளன. இனிய கனிகளைக் கொடுக்கும் அழகிய வாழை மரங்கள் உள்ளன. போதுமான நெல் விளைகிறது. மலர்கள் நிரம்பியுள்ள பூச்செடிகள் உள்ளன. அதிலிருந்து நல்ல தேன் கிடைக்கும். பொன்னியைப் போன்ற நல்ல நீரையுடைய ஆறு உள்ளது. உன் இன் துணைவி சீதையுடன் மகிழ்ந்து விளையாடுவதற்கு நாரைகளும் அன்னங்களும் இருக்கின்றன” என்று கூறுகிறான். இங்கு ஆற்று வளத்தைப் பற்றிக் கூறும் போது பொன்னியைப் போன்ற நீர் வளம் உள்ள நாடு என்று அகத்தியன் குறிப்பிடுகிறார். கம்பனுக்கும் பொன்னிக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. கம்பன் பொன்னியை எப்போதும் மறப்பதில்லை என்பதை இப்பாடல் காட்டுகிறது. “கன்னி இள வாழை கனி ஈவ, கதிர் வாலின் செந்நெல் உள, தேன் ஒழுகு போதும் உள தெய்வப் பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள போதா அன்னம் உள, பொன் இவளொடு அன்பின் விளையாட” என்பது கம்பன் கவிதை. இப்பாடலில் கம்பன் தெய்வப் பொன்னி எனக் குறிப்பிடுவது சிறப்பானதாகும். மேலும் கம்பன் தென்றலைப் பற்றிக் குறிப்பிடும் போது கூட தண்தமிழ்த் தென்றல் என்று ஒரு பாடலில்