பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கம்பனும் தமிழும் 595 போல், திருவேங்கட மலை புகழோங்கி நின்றது என்று குறிப்பிட்டு விட்டு, அங்கே நீங்கள் செல்ல வேண்டாம். அது புண்ணியமான இடம். அங்கு நீங்கள் சென்றால் உங்களுடைய பாவங்கள் நீங்கி மோட்சத்திற்குச் சென்று விடுவீர்கள். அப்போது சீதையைத் தேடும் வேலை நின்று விடும், எனவே அம்மலைக்குச் செல்ல வேண்டாம். அங்கிருந்து தெற்கே செல்லுங்கள்” என்று சுக்கிரீவன் கூறுவதைக் கம்பன் குறிப்பிடுகிறார். திருவேங்கடத்தைக் கடந்து தொண்டை நாடு செல்லும் படியும் அதன் பின்னர் பொன்னி எனும் தெய்வத்திரு நதியின் இரு கரைகளிலும் சீதையைத் தேடுமாறும் சுக்கிரீவன் மாருதிக்கும் மற்றவர்களுக்கும் கூறுவதைக் கம்பன் குறிப்பிடும் போது பொன்னி நதிக்குக் கம்பன் கொடுக்கும் சிறப்பைக் காண்கிறோம். “கோடுறுமால் வரை அதனைக் குறு குதிரேல் உம் நெடிய கொடுமை நீங்கி வீடுறுதிர், ஆதலினான் விலங்குதிர், அப் புறத்து நீர் மேவு தொண்டை நாடுறுதிர், உற்றதனை நாடுறுதிர் அதன் பின்னை நளிநீர்ப் பொன்னிச் சேருறு தண் புனல் தெய்வத்திரு நதியின் இருகரையும் தெரிதிர் மாதோ !” என்பதும் கம்பர் பாடல். கம்பர் திருவேங்கடத்தை மிகவும் சிறப்பித்துப் பாடுகிறார். அம்மா)மலை வட சொற்கும் தென் சொற்கும் எல்லை. நான் மறைக்கும் மற்றை நூலுக்கும் இடை சொற்ற பொருட்கெல்லாம் எல்லை. நல்லறிவுக்கு ஈறு. வேறு புடை சுற்றும் துணையின்றிப் புகழ் பொதிந்த மெய். சூத கற்றும் திருமறையோர் துறையாடும், சுருதித் தொன்னுல் மாதவத்தோர் உறைவிடம். மழை உறங்கும் மணித்தடம். வான மாதர் கீதம் ஒத்த கின்னரங்கள், இன்னரம்பு வருடு தொறும் கிளக்கும் ஒதை கொண்ட இரு சொல்லுக்கும் எல்லையான திருவேங்கடமலை என்று மிக அருமையாகக் கம்பர் தனது கவிதையில் குறிப்பிடுகிறார்.