பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 497 “வில் எடுக்க உரியார்கள் வெய்யசில வீரர் இங்கும் உளர், மெல்லியோய் கல்எடுக்க உரியானும் நின்றனன், அது இன்று நாளையிடை காணலாம் எல் எடுத்த படை இந்திராதியர், உனக்கு இடைந்து உயிர் கொடு ஏகுவார் புல் எடுத்தவர்கள் அல்லம், வேறு சில போர் எடுத்து எதிர் புகுந்தோம் ”. என்று இந்திரசித்தனை இடித்துக் கூறி அனுமன் பேசினான். வில் எடுத்துப்போர் செய்ய எங்கள் பக்கம் வேறு சிலர் இருக்கிறார்கள். நான் கல் எடுத்துத்தான் போர் செய்வேன். இன்றும் நாளையும் அதைநீ சந்திப்பாய். இந்திராதி தேவர்கள் உன்னிடம் போர் செய்துத் தோற்று ஒடிப்போயிருக்கலாம். ஆனால் நாங்கள் உன்னிடம் தோற்றுப் புல்லைக் கவ்வியவர்கள் அல்ல. எங்களிடம் தோற்று மண்ணைக் கவ்வியவர்கள் நீங்கள் தான். நாங்கள் பெரும்போர் நடத்த வந்துள்ளோம். எங்களைச் சந்திப்பாய், என்று அனுமன் மிக நன்றாகப் பதில் கூறியதைக் கம்பன் மிக அழகாகக் குறிப்பிடுகிறார். மாருதி மேலும் இந்திரசித்தனிடம் கேட்கிறான்: “என்னோடே பொருதியோ? அது அன்றெனில் இலக்குவப் பெயரின் எம்பிரான் தன்னோடே பொருதியோ? சொல் உந்தைதலை தள்ளநின்ற தனிவள்ளலாம் மன்னோடே பொருதியோ? உரைத்தது மறுக்கிலோம்! என வாங்கினான் பொன்னொடே பொருவின் அல்லது ஒன்றொடு பொருப்படா உயர் புயத்தினான்” என்று அனுமன் கேட்கிறான். இதைக் கேட்ட இந்திரசித்தன் அந்த இலக்குவன் எங்கே இருக்கிறான், என் தம்பியைக் கொன்றவன். அவன் தலையைக் கொய்ய நான் வந்துள்ளேன்.”. என்று வானரப்படையைக் கலக்கி இலக்குவனை எதிர்க்க முன் வந்தான். இலக்குவன் தலையிட்டு அரக்கர் படையைத் தடுத்தான். இந்திரசித்தனுக்கும் இலக்குவனுக்கும் சரிபோர் தொடங்கிற்று.