பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ғылшвит – бәQ_ғарғытилл иптіsosu –әу. «Rofisитеғайт 474 உலைவு இலாத்தருமம் பூண்டாய் உலகுள தனையும் உள்ளாய், தலைவன் நி உலகுக்கெல்லாம் உனக்கு அது தக்கதே, ஆல் புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதே, ஆல்” என்று கும்பகருணன் கூறுவதைக் கவிதை குறிப்பிடுகிறது. “கருத்திலா இறைவன், தீமை கருதினால் அதனைக் காத்துத் திருத்தலாம் ஆகின் அன்றே திருத்தலாம், தீராது ஆயின் பொருத்துறு பொருள் உண்டாமோ? பொரு தொழிற்கு உரியர்ஆகி ஒருத்தரின் முன்னம் சாதல், உண்டவர்க்கு உரியது அம்மா.” 'அரசன் போதிய அறிவில்லாமல் தீமையைக் கருதினால், அதை எடுத்துக் கூறிச் சுட்டிக்காட்டித் தலைவனை அப்பொழுதே திருத்தலாம். திருத்த முயற்சிக்கலாம். அது முடியாமல் போய் விட்டால் அதற்காக அவனைக் கை விடுதல் ஆகாது. நம்மைப் போருக்காகத் தயார் படுத்திய பின்னர், நம்முடைய உயிர் அவருக்குரியதாகும். அவருக்கு முன்னர் சாவது நமது கடமையாகும்”என்று கும்பகருணன் கூறுகிறார். இங்குக் கம்பன் செஞ்சோற்றுக்கடன் பற்றிக் கும்பகருணன் மூலம் குறிப்பிட்டுக் கூறுகிறார் போலும், மகாபாரதக் கதையில், குந்தி கர்ணனிடம் சென்று தான் அவனது தாய் என்பதை நிரூபித்து விட்டு, அவனைத் தனது சகோதரர்களுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி வேண்டிக் கொண்ட போது கர்ணன், “பெற்ற நீர் மக அன்பிலாமையோ அன்றிப் பெரும் பழி நாணியோ விடுத்தீர், அற்றை நாள் தொடங்கி என்னை இன்றள வும் ஆருயிர்த்துணையெனக் கருதி