பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. dithugpun sirélusyti Հ()Հ பொருது பொன்றுதல் புரிதிரோ? உறுவது புகலும் தருவென் இன்றுமக்கு ஏற்றுளதுயான் எனச்சலித்தான்” இதைக்கேட்ட இலக்குவன் சூளுரைத்து, “வாளின் திண்சிலைத் தொழிலினின் மல்லினின் மற்றை ஆளுற்று எண்ணிய படைக்கலம் பெற்றினும் அமரில் கோள் உற்று உன்னொடு குறித்து அமர் செய்து உயிர் கொள்வான் சூள் உற்றேன்! இதுசரதம் என்று இலக் குவன் சொன்னான்.” என்று கூறினான். இவ்வாறு போர் கடுமையாக நீடித்தது. “அரக்கர் என்பது ஒர் பெயர் படைத்தவர்க் கெலாம், அடுத்த புரக்கும் நன்கடன் செயவுளன் வீடணன் போந்தான் கரக்கும் நுந்தைக்கு நீ செயக்கடவன கடன்கள் இரக்கம் உற்று உனக்கு அவன்செயும் என்றனன் இளையோன்” இவ்வாறு இலக்குவன் கூறிப்போருக்கு மேலும் வேகம் ஊட்டினான். “ஆனகாலையில் அயில் எயிற்று அரக்கன் நெஞ்சு அழன்று வானும் வையமும் திசைகளும் யாவையும் மறையப் பானல் சோலையைப் பருகுவ, சுடர்முகப்பகழி சோனை மாரியின், இருமடி மும்மடி சொரிந்தான் ” இவ்வாறு இந்திரசித்தன் தொடுத்த கொடுங்கணைகளையெல்லாம் இலக்குவன் தவிடு பொடியாக்கினான். இந்திரசித்தன் மீண்டும் மாயமாகி ஆகாயத்தில் பறந்து மறைந்தான். அவனை இன்று