பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப் பார்வை-அ. சீனிவாசன் 5()4 பிழைக்கவிடக்கூடாது. அவன்மீது பிரம்மாஸ்திரத்தைத் தொடுக்க வேண்டும் என்று இலக்குவன் கூறினான். “ கண்இமைப் பதன்முன்பு போய் விசும்பிடை க் கரந்தான் அண்ணல் மற்றவன் ஆக்கை கண்டு அறி கிலன் ஆகிப் பண்ணவர்க்கு இவன் பிழைக்குமேல் படுக் கும் நம்படையை எண்ண மற்றிலை அயன்படை தொடுப்பல் என்று இசைந்தான்” அப்போது இராமன் தலையிட்டு 'அந்தணன் படைக்கலத்தைத் தொடுத்தால் அது மூவுலகங்களையும் அழித்துவிடும். பெரும் நாசத்தை விளைவித்துவிடும். அத்தகையப் பெரும் நாசத்தை விளைவிக்கும் படைக்கலத்தை விடுவதை நாம் தவிர்க்க வேண்டும் என்று இலக்குவனிடம் அன்புபடக் கூறினான். அதைக் கேட்டு இலக்குவனும் அதற்கு இசைந்தான். “ஆன்றவன் அது பகர்தலும் அறநிலை வழாதாய் ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில் இவ்வுலகம் மூன்றையும் கடும், ஒருவனால் முடிகிலது என்றான், சான்றவன் அது தவிர்த்தனன் உணர்வுடைத் தம்பி” இதை அறிந்த வஞ்சகன் இந்திரசித்தன், தான் பிரம்மாஸ்திரத்தைத் தொடுக்க தீர்மானித்துப் போர்க்களத்தை விட்டு வெளியேறி இலங்கையில் புகுந்து தானே முதலில் பிரம்மாஸ்திரத்தைத் தொடுக்கப் போவதாகக் கூறி அதற்கான வேள்வியைச் செய்யத் தொடங்கினான். சூரியன் மறைந்தான். இராமனும் இலக்குவனும் போரை நிறுத்திக் கொண்டனர். வீடணன் படைகளுக்கு உணவு சேகரிக்கவும் இலக்குவன் படைகளைக் காக்கவும் இராமன் ஆயுதங்களுக்குப் பூசை செய்யவும் புறப்பட்டனர். 'மறைந்து போய் நின்ற வஞ்சனும் அவருடை மனத்தை