பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

эшшоо - 290), «Сурэтили ыштооби --91. 45oflsuтвой 51() இந்திரசித்தன் ஏவிய நான்முகன் கணையால் இலக்குவனும் மற்றவர்களும் வீழ்ந்து கிடந்த போது இராமன் ஒரு சாதாரண மனிதனைப்போல அழுது புலம்பினான். அடுத்து என்ன செய்வது என்று திகைத்தான் என்னும் விவரங்கள் அரசியல் முறையில் காணத்தக்கன. போர்களத்தின் காட்சியைத் துதுவர்கள் பார்த்துச் சென்று இராவணனிடம் கூறினர். உனது மகனுடைய கணையால் இலக்குவனும், வானரப்படைகளும் மாண்டு கிடக்கின்றனர். அவர்களைக் கண்ட இராமனும் உயிர்விட்டான். உன்பகை ஒழிந்தது”. என்று கூறினர். இராவணன் மகிழ்ச்சியடைந்தான். சீதையை விமானத்தில் ஏற்றிச் சென்று அந்தக் காட்சியைக் காண்பிக்க ണ6്Tഞ്ഞfിങ്ങr്. போர்க்களத்தில் மாண்டு கிடந்த இராக்கதவீரர்களின் சடலங்களையெல்லாம் கொண்டு போய்க் கடலில் போட்டுவிட அரக்கன் தலைவன் எற்பாடு செய்தான். சீதையை விமானத்தில் ஏற்றி வரச்சொல்லி போர்க்களத்தில் இராமனும் இலக்குவனும் வானரப்படை வீரர்களும் இறந்து கிடந்த காட்சியைக் காண்பித்தனர். சீதை அதைக் கண்டு கலங்கினாள். இருப்பினும் இதிலும் சூது இருக்கலாம் என்று கூறி திரிசடைச் சீதையைத் தேற்றினாள். " மாயமான் விடுத்தவாறும் சனகனை வகுத்தவாறும் போயநாள் நாகபாசம் பிணித்தது போனவாறும் நீ அமர நினையாய்! மாளநினைத்தியோ! நெறியிலாரால் ஆயமாமாயம் ஒன்றும் அஞ்சலை, அன்னம் அன்னாய் ” என்று திரிசடை என்னும் நல்லாள் தேற்றினாள் உணவு தேடச் சென்றுத் திரும்பிய வீடணன் போர்க்களத்தில் அனைவரும் மாண்டு கிடப்பதைக் கண்டு வருந்தினான். நான்முகன் படையால் நடத்திருப்பதை உணர்ந்தான். இராமனை இப்படை பாதித்திருக்காது என்று கருதி அவனைத் தொட்டுப்பார்த்தான். அவன் மீது காயங்கள் இல்லை. ஒரு தீப்பந்தத்தைத் தயாரித்துக் கொண்டுத் தேடிப்பார்த்து அனுமனைக் கண்டான். அவன் கை கட்டி வாய் பொத்தி அடங்கிக் கிடந்தான். அவனை மெதுவாகத் தட்டி எழுப்பினான்.