பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்_ஒரு_சமுதாயப் பார்வை-அ-சீனிவாசன் 476 தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ தமை யன் மண்மேல்," என்று கும்பகருணன் கூறுவதைக் கம்பன் மிகவும் சிறப்பாகவே எடுத்துக் காட்டுவதைக் காண்கிறோம். இன்னும் கும்பகருணன் சிறந்த தத்துவ ஞானக் கருத்தோடு கூடிய அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்களையும் தனது அரக்கர் குண இயல்போடு இணைத்துத் தனது தம்பியிடம் எடுத்துக் கூறுவதைக் கம்பன் குறிப்பிடுகிறார். “செம்பிட்டுச் செய்த இஞ்சித்திரு நகர்ச் செல்வம் தேறி வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொ ண்ட பகையை வாழ்த்தி அம்பிட்டுத் துன்னம் கொண்ட புண் உடை நெஞ்சோடு ஐய! கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றை யும் ஆடல் கொண்டேன்” “நிலையில்லாத அரசுச் செல்வத்தை நம்பி, நம்முடைய பகைவரை வாழ்த்தி நின்று, நமது உடம்பில் நமது நெஞ்சில் அந்தப் பகைவரின் அம்புகளால் பட்ட புண்களையுடைய உள்ளத்தோடு அவர்களைக் கும்பிட்டு நான் வாழ மாட்டேன், மரணத்தைக் கண்டும் நான் அஞ்ச மாட்டேன் என்று கும்பகருணன் கூறுகிறான் இக்கருத்து ஒரு தனித்தன்மையான அரசியல் நிலை பாடாகும். என்ன தான் இருந்தாலும் பகைவன் பகைவன் தான். போர்க்களத்தில் நின்று கொண்டு இடம் மாறுவது கேவலமானதாகும். எதிரிகளின் அம்புகள் பட்டு எங்கள் நெஞ்சுகள் எல்லாம் புண்ணாகி இரத்தம் கசிந்து கொண்டிருக்கிறது. நிலையில்லாத வாழ்க்கையை அரசைச் செல்வத்தை நம்பி நான் யாருக்கும் கும்பிட்டு வாழ மாட்டேன் என்று ஒரு தன்மான உணர்வோடும் சுய மரியாதையுள்ள விடுதலை உணர்வோடும் கும்பகருணன் மிகவும் உறுதியாகத் தனது கருத்தை எடுத்துக் கூறி வீடணனுடைய ஆலோசனையை மறுத்து விடுகிறான். இலங்கையின் அரசியலில் கும்பகருணனுடைய கொள்கை நிலையும் போர் உத்தியும் தனித்தன்மை கொண்டதாக