பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. dinugpun pindluugylin 539 இன்றுளார் நாளை மாள்வார்? புகழுக்கு இறுதியுண்டோ?” நான் போரில் வெற்றி கொள்ளவில்லையென்றாலும் வேதம் உள்ளளவும் இராமன் பெயர் நிற்குமாயின் என் பெயரும் நிலைத்து நிற்கும். இறப்பு என்பது எல்லோருக்கும் எப்படியும் வந்தே தீரும். இன்றிருப்பவர் நாளை மாண்டு போகலாம். அது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் புகழுக்கு இறுதியில்லை, முடிவில்லை என்று ஒரு தனியான தத்துவக் கருத்தை கூறி விட்டு, “சொல்லியென் பலவும் நீ நின் இருக்கையைத் தொடர்ந்து தோளில் புல்லியப்பகழி வாங்கிப் போர்தொழில் சிரமம் போக்கி எல்லியும் கழுத்தி என்னா எழுந்தனன் எழுந்து பேழ் வாய், வல்லியம் முனிந்தால் அன்னான் வருக தேர் விரைவில் என்றான்” இதெல்லாம் பேசி என்ன பயன்? நீ உனது ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு ஒய்வு எடுத்துக் கொள்வாய் என்று கூறி விட்டு வேங்கை போல் சீறி எழுந்து தேரைக் கொண்டு வா என ஆணையிட்டு போருக்குப் புறப்படத் தயாரானான். அப்போது இந்திரசித்தன் மனம் வருந்தி எந்தாய் ஒழிந்தருள் சீற்றம் சொன்ன உறுதியைப் பொருத்தி யான் போய்க் கழிந்தனன் என்ற பின்னர் நல்லவா காண்டி என்று கூறிவிட்டு அவனுடைய தெய்வத்தேர் மீது ஏறிப் போருக்குப் புறப்பட்டான். “படைக்கல விஞ்சை மற்றும் படைத்தன பலவும் தன்பால் அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர் மேல் ஆக்கி கொடைத் தொழில் வேட்டோர்க்கெல்லாம் கொடுத்தனர் கொடியோன் தன்னைக் கடைக்கனால் நோக்கி இரு கணிர் கலுழப் போனான்.”