பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3lßusår_-_SPG c{IPSmut). Lūw62/_=</ efówfø2/s^sår 548 புறத்தும் பொங்கிய பங்கியர் காலனும் புகழ்வார்” "சூலம வாங்கிடின், சுடர்மழு ஏந்திடின் ԵFԼ 5)ITT Ճ)IITET கோலம் வெம்சிலை பிடித்திடின் கொற்ற வேல் கொள்ளின் சாரவான் தண்டு தரித்திடின் சக்கரம் தாங்கின் காலன். மால், சிவன், குமரன் என்று இவ ரையும் கடப்பர்.” அறத்தைத் தின்று கருணையைப்பருகி, மறத்தைப் பூண்டு, பாவத்தை மணந்து நிற்பவர். இருண்ட நெஞ்சம் கொண்டவர், நெருப்பைப் போன்றவர்கள், நீண்ட மயிர்கள் தொங்கும் பயங்கரமான தோற்றத்தைக் கொண்டவர்கள், காலனே இவர்களைக் கண்டு புகழ் பாடுவான் என்றும், சூலம், மழு, வாள், வில், வேல், கதை, நீண்ட தடிகள், சக்கரம் முதலிய பல பயங்கரமான கொலை ஆயுதங்களைத் தாங்கி நிற்பவர்கள். காலனையும், திருமாலையும் சிவனையும் முருகனையும் கூட வெல்லும் சக்தி படைத்தவர்கள், என்றெல்லாம் மூலபலப் படையின் தோற்றத்தையும், ஆயுத பலத்தையும் வலுவையும் பற்றிக் கம்பன் தனது பாடல்களில் குறிப்பிடுகிறார். இத்தகைய கோரமான பயங்கர வடிவம் கொண்ட மூலபலப்படை திரண்டு வருகிறது. இதைக் கண்டு வானரப்படை நடுநடுங்கி ஒட்ட மெடுத்தது. அனுமன், அங்கதன், சுக்கிரீவன் தவிர மற்றவர்களெல்லாம் பயந்து ஒடி விட்டதாகக் கம்பன் கூறுகிறார். புற்றிலிருந்து பாம்பு வந்த போது அதைக் கண்ட எலிகள் பயந்து ஒடுவதைப் போல மூலபல அரக்கர் படையைக் கண்டு வானரர்கள் பலதிசைகளிலும் பயந்து ஓடினர் என்று கம்பன் குறிப்பிடுகிறார். இத்தகைய பெரிய வலிய படை எங்கிருந்து வந்தது? இது பற்றிய விவரம் என்ன? என்று இராமன் வீடணனைக் கேட்க, அவன் அம்மூலபலப்படையின் இரகசியத்தையும் அதை வெல்லும் வழியைப் பற்றியும் இராமனுக்கு எடுத்துக் கூறுகிறான்.