பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 56] இவன் சிவனாக இருப்பானா? அப்படித் தெரியவில்லை. நான்முகனாக இருப்பானா? அதுவுமில்லை. திருமாலாக இருப்பானோ? அப்படியும் தெரியவில்லை. எனது வல்லமை மிக்க வரங்களையெல்லாம் அழிக்கிறான். அத்தனை தவவலிமை உள்ளவனா என்றால், அவ்வளவு கடுந்தவம் செய்து முடிக்கும் தரம் உள்ளவனாகவும் தெரியவில்லை. பின்னர் யாராக இருப்பான், இவன்தான் அந்த வேத முதல் காரணனாக இருப்பானோ? என்று இராவணன் எண்ணுகிறான். பின்னர்: “ யாரேனும்தான் ஆகுக யான் என் தனியாண்மை பேரேன், இன்றே வென்றி முடிப்பென் பெயர் கில்லேன் நேரே செல்வேன், கொல்லும் அரக்கன் நிமிர்வேய்தி வேரே நிற்கும் மீள்கிலென் என்ன விடல் உற்றான்” அவன் யாராயினும் ஆகட்டும். நான் எனது தனியாண்மை பெயரேன் என்று இராவணன் கூறுவது ஒரு தனிச்சிறப்பான செய்தியாகும். தனியாண்மை பெயரேன் என்பதுதான் இராவணனுடைய அரசியலில் தொடக்கம் முதல் இறுதிவரை உள்ள ஒரு கம்பீரமான நிலையாகும் என்பதைக் கம்பன் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறார். இராவணன், “தன் எதிரில் நிற்பவன் யாரேனும் ஆகுக, எனது தனியாண்மை பெயரேன் நேரே செல்வேன். பெயர்கிலேன். வென்றி முடிப்பேன்”,என்று நிமிர்ந்து நின்று இராமன் மீது கடுங் -கணைகளைத் தொடுக்கிறான். இராவணனுடைய கணைகளைத் தடுத்த இராமன் பதில் கணைகளைத் தொடுத்து இராவணனுடைய சில தலைகளை அறுத்தான். “ வேதியர் வேதத்து மெய்யன், வெய்யவர்க்கு, ஆதியன் அணுகிய அற்றம் நோக்கினான், சாதியின் நிமிந்தது ஒர் தலையைத் தள்ளினான், பாதியின் மதிமுகப் பகழி ஒன்றினால் பிரைச்சந்திரன் வடிவத்திலான அம்பினால் சாதியின் நிமிர்ந்த தலைகளில் ஒன்றை அறுத்துத் தள்ளினான் என்று கம்பன் கவிதை தெரிவிக்கிறது. அறுந்த தலைகள் மீண்டும் மீண்டும் சேர்கின்றன. இராமன் மற்றொரு கணையால் இராவணனுடைய கையை வெட்டினான்.