பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்_ஒரு_சமுதாயப் பார்வை-அ-சீனிவாசன் 87 ஒரு சிறந்த ஆயினும் சற்று முரண்பாடான பாத்திரமாகக் கம்பன் படைத்திருக்கிறார். கும்பகர்ணன் போர்க்கோலம் பூண்டு களத்திற்கு வருகிறான். போர்க்களத்தில் வீடணன் அவனருகில் சென்று “போர் செய்வதை விட்டு விட்டு தன்னுடன் இராமன் பக்கம் வந்து விடும்படி கூறுகிறான். அப்போது கும்பகர்ணன் வீடணனிடம் “நீ நீதியும் தருமமும் நின்ற நிலைமையும் புலமை தானும் ஆதி அம் கடவுளாலே அருந்தவம் ஆற்றிப் பெற்றாய்” எனவே நீ திரும்பவும் என்னிடம் ஏன் வந்தாய், நீ அயோத்தி வேந்தனுக்கு அடைக்கலமாகி விட்டாய், அங்கேயே இரு, அரக்கர்களெல்லாம் இறந்து பட்ட பின்னர் அவர்களுக்கெல்லாம் ஈமக்கடன் செலுத்த வேண்டும் பின்னர் 'திருவுறை மார்பனோடு இலங்கை நகருக்குள்ளே வா என்று கூறுகிறான். கும்பகர்ணனுக்கும் விடணனுக்கும் ஒரு உரையாடல் நடைபெறுகிறது. தான் அண்ணனைத் தனித்து விட முடியாது என்றும் தன்னை வளர்த்தவன் பக்கம் நிற்க வேண்டும்” என்றும் கூறி வீடணனைத் திரும்பி அனுப்பி விடுகிறான். கும்பகர்ணன் இணையில்லாத வீரத்துடன் போர் புரிகிறான். அவனை எதிர்த்துப் போர்க் களத்தில் யாரும் நிற்க முடியவில்லை. பின்னர் இராமனே நேருக்கு நேராக நின்று கும்பகர்ணன் மீது பாணம் தொடுக்கிறான். அவனுடைய நெற்றியின் மீது இராமன் ஒரு கணையை விடுக்கிறான். அந்த அபூர்வமான காட்சியைக் கம்பன் மிகவும் அழகாகக் காட்டுகிறார். - “நெற்றியின் நின்று ஒளி நெடிது இமைப்பன கொற்றவன் சரம் எனக் குறிப்பின் உன்னினான் சுற்றுற நோக்கினன், தொழுது வாழ்த்தினான் முற்றிய பொருட்கெல்லாம் முடிவுளான் தனை” தனது நெற்றியில் பட்ட கணைகள் இராமனுடைய கணைகள் தான் என்பதை அறிந்து கொண்ட கும்பகர்ணன் அந்த முற்றிய பொருளுக்கெல்லாம் முடிவானவனைத் தொழுது வாழ்த்தினான் எனக் கம்பன் கூறுகிறார். கும்பகர்ணன் வாய் மொழியால் கம்பன் காட்டும் கடவுள் கொள்கை ‘வேதநாயகன் வெம்கணை” யென்றும் “வாசியும்