பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வருகிறோம். அவை அண்மைக் காலமாக மேலும் விரிவடைந்து வருகின்றன. இன்னும் அதிகமாக விரிவு பட வேண்டும், அவை பிரபலமடைய வேண்டும்.

கம்பனுடைய மகாகாவியம் நமது பாரத நாட்டின் இரண்டு பெரிய இதிகாசங்களில் ஒன்றைப் பற்றியதாகும். இந்த மாபெரும் மகாகாவியம் பன்முகம் கொண்ட விரிவான பெருங்காவியமாகும். இன்று கம்பனுடைய இராமாயணக் காவியம் தமிழ் இலக்கியப் பெருங்கடலின் ஒரு பகுதியாகவே உயர் கல்வி நிலையங்களிலும் பயிலப்படுகிறது. கம்பனுக்கு நமது பல்கலைக் கழகங்களில் தனித்துறைகள் அமைத்தும் கூட ஆய்வு செய்தல் அவசியமாகும்.

கம்பனுடைய இராமன், திருமாலின் திரு அவதாரம். இராமனும் கிருஷ்ணனும் பாரத நாட்டு மக்களின் குல தெய்வங்கள். இராமனுடைய பெயரும், இராமனுடன் இணைந்த இலக்குவன், அனுமந்தன், பரதன், குகன், தசரதன், ஜனகராஜன், சீதை, கவுசலை, முதலிய பெயர்கள் எல்லாம் இந்திய மக்களுடைய உள்ளங்களில் தெய்வீக வடிவங்கள் பெற்று நிலை பெற்றிருக்கின்றன. நீங்காத இடம் பெற்றிருக்கின்றன. இந்தப் பெயர்களை நமது மக்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.

இன்னும் இராமாயணக் கதாபாத்திரங்களின், தெய்வீகப் பாத்திரங்களின் பெயர்கள் இராமன், இலக்குவன், பரதன், சத்துருக்கனன், தசரதன், வசிட்டன், குகன், வாலி, சுக்கிரீவன், அங்கதன், அனுமன், இராவணன், கும்பகருணன், வீடணன், இந்திரசித்தன், அதிகாயன், ஜனகராஜன், சீதை, கவுசலை, சுமி த்திரை, கைகேயி, கூனி என்னும் மந்தரை, மண்டோதரி, சூர்ப்பனகை, தாடகை முதலிய பெயர்களை நமது நாட்டு மக்கள் பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவரும் அறிவார்கள்.

காலம் காலமாக இராமாயணக் கதையும், மகாபாரதக் கதையும் மக்களிடம் பேசப் பட்டு, அதன் கதையும் கருத்துக்களும் நமது நாட்டு மக்களிடம் ஆழ்ந்து பதிவாகியிருக்கின்றன.

கம்பனுடைய மகாகாவியத்தில் இராமபிரானின் அவதாரப் பெருமைகளைப் பற்றி மட்டுமல்லாமல், அயோத்தி, மிதிலை,

{{{pagenum}}}