பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்_ஒரு_சமுதாயப் பார்வை-அ. சீனிவாசன் |O2 தரும நீரர் தயரதன் காதலர் செருவில் நேரும் நிருதரைத் தேடுவார்” என்று கூறுகிறாள். அவ்வாறு கூறும்போது அந்தச் சூர்ப்பனகையின் உள்ளக் கிடக்கையை மிக நுட்பமாக அழகாகக் கம்பன் எடுத்துக் காட்டுகிறார். அத்துடன் மானுடர் தம்மின் சிறப்பும் அந்த சொற்களில் வெளிப்படுகிறது. இந்த மானிடர் இருவரும் தாபம் கொள்ளப் பட வேண்டியவர்கள், வில்வாள் முதலிய ஆயுதங்களைக் கையிலேந்தியவர்கள். மன்மதனையொத்த அழகு மேனியைக் கொண்டவர்கள். போரிலே எதிர் நிற்கும் அரக்கர்களைத் தேடுபவர்களாக விருக்கிறார்கள் என்று சூர்ப்பனகை வாய் மொழியாகக் கம்பன் எடுத்துக் கூறுவது மிக அற்புதமான ஒரு படைப்பாக அமைந்திருக்கிறது. சூர்ப்பனகை கரது டனர்களிடம் முறையிட்டாள். கரன்கோபாவேசம் கொண்டு தனது படைகளை இராமன் மீது ஏவி விட்டான். அகம்பன் என்னும் அரக்கன் இராமனிடம் போரிடச் செல்கிறான். “இணைய ஆதலின் மானுடன் ஒருவன் என்று நினையலாவது இங்கு எழைமை” என்று சொல்லக் கேட்டு பெரிய ஏளனச் சிரிப்புச் சிரித்து விட்டு “நன்றிது சேவகம் தேவரைத் தேய வரைத்த அம்மி ஆம் அலங்கு எழில்தோள் அமர் வேண்டி இரைத்து வீங்குவ, மானிடர்க்கு எளிய வோ” எனத் தேவர்களையே எதிர்த்து ஒழித்த வலுவான தோள்களால் இந்த மானிடரை வெல்வது கடினமா” என்று கூறுகிறான். துடனனும் “வச்சையாம் எனும் பயம் மனத்து உண்டென வாழும் கொச்சை மாந்தரைக் கோல்வளை மகளிரும் கூசார்” என்றும் “ஏக்கம் இங்கு இதன் மேலும் உண்டோ, இகல் மனிதன் ஆக்கும் வெஞ்சமத்து ஆண்மை’ என்று மனிதரையிகழ்ந்து கூறி இராமனை எதிர்த்துப் போரிட்டு மடிந்ததைக் கம்பன் எடுத்துக் காட்டியுள்ளார். வல்லமை மிக்க தூடணனும் கரனும் இராமன் என்னும் மனிதனிடத்தில் போரில் தோற்று மடிந்தனர் என்பதைக் கம்பன் தனது அழகான கவிதைகளால் எடுத்துக் காட்டியுள்ளார்.