பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйшейт — бәсъ ғарғлили штвовал —ғу. Збойылғайт | 10 இல்லையென்பதை நீயறிவாய், என் மீது என்ன குற்றம் கண்டாய்”என்று வாலி இராமனிடம் கேட்கிறான். இராமன் - வாலி வாக்குவாதம் இராமாயணக் கதையில் ஒரு சிறந்த இலக்கியப் பகுதியாக மேலும் தொடர்கிறது. வாலியின் விளக்கத்தையும் கேள்வியையும் கேட்ட இராமன், “தக்கது இன்ன, தகாதன இன்ன வென்று ஒக்க உன்னலராயின் உயர்ந்துள்ள மக்களும் விலங்கே, மனுவின் நெறி புக்க வேல் அவ்விலங்கும் புத்தேளிரே!” என்று இராமபிரான் பொது நெறியை உணர்த்திக் கூறுவது கம்பனுடைய தலை சிறந்தக் கருத்துக் கருவூலமாகும். இது தக்கது, இது தகாதது என்று கருதாமல் யாரும் நடந்து கொள்வார்களானால் அவர்கள் உயர்ந்த குடியில் பிறந்த மக்களாயினும் விலங்கைப் போன்றவர்களேயாகும். அதே தமயத்தில் நீதி நெறி தவறாமல் நடப்பார்களானால் அலங்குகளைப் போன்றவர்களாயினும் அவர்கள் தேவர்களுக்கொப்பானவர்களே யாகும் என்ற கம்பன் கூறுவது மிக முக்கியமாக சாதி அமைப்பு முறைகளுக்கு மாறான ஒரு சிறந்த கருத்தாகும். இத்தகைய கருத்துக்கள் கம்ப ராமாயணக் காவியத்தில் பல இடங்களிலும் காணப்படுகின்றன. மானுடம் மேலானது என்னும் கருத்து மிகவும் சிறந்த கருத்தாக அமைந்துள்ளது. மானுடத்திற்கு எத்தனை சிறப்பையும் உயர்வையும் கம்பன் தனது காவியத்தில் தந்துள்ளாரென்பது மிகுந்த பெருமைக்குரிய வொன்றாகும். இது கம்பநாடர் தமிழிலக்கியத்திற்கு ஆற்றியுள்ள மிகப்பெரிய சிறந்த பங்களிப்பாகும். சுந்தர காண்டத்தில் அனுமன் சீதையைக் தேடி இலங்கைக்குள் வந்தான். அசோக வனத்தில் சீதையைக் கண்டுவிட்டான். கண்டு பேசி அடையாளம் பெற்றுக் கொண்டான். பின்னர் இலங்கை நகரில் புகுந்து தான்