பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. stol golo uongol–opup: | | | அங்கு வந்ததன் அடையாளமாக மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக ஏதேனும் ஒரு பெரிய அரிய செயலைச் செய்ய வேண்டுமெனக் கருதி நகருக்குள் அட்டகாசம் செய்தான். மரங்களை ஒடித்தான். சோலைகளைச் சிதைத்தான். தன்னைத் தடுக்க வந்த அரக்கர் பலரையும் கொன்றான். தன்னை யெதிர்த்த கிங்கரர்களையும், சம்புமாலியென்னும் வலிமை மிக்க அரக்கனையும் பஞ்ச சேனாபதிகளையும் இராவணனுடைய குமாரர்களில் ஒருவனான அட்ச குமாரனையும் எதிர்த்து வதைத்துக் கொன்று முடித்தான். கடைசியில் இந்திரசித்தனே நேரில் தனது படையுடன் வந்து அனுமனை எதிர்த்தான். அப்போது இந்திரசித்தன் வீரத்துடன் பேசியதைக் கம்பர் குறிப்பிடுகிறார். “கானிடை அத்தைக் குற்ற குற்றமும் கரனார் பாடும் யானுடைய யெம்பி விந்த இடுக்கணும் பிறவும் எல்லாம் மானிடர் இருவராலும் வானரம் ஒன்றினாலும் ஆனதே யுள, என் வீரம் அழகிற்றே அம்ம’ என்றான் கானகத்தில் அத்தை சூர்ப்பண கைக்கு ஏற்பட்ட அவமானத்திற்கும் கரன் முதலானோர் கொல்லப் பட்டதற்கும், எனது தம்பி அட்சகுமாரன் இறந்து பட்டதற்கும் மற்ற பல நிகழ்ச்சிகளுக்கெல்லாம் மானிடர் இருவரும் வானரம் ஒன்றும் காரணமாகும். எனவே அதைப் பார்த்துக் கொண்டிருப்பது எனது வீரத்திற்கழகல்ல என்று இந்திரசித்தன் சூளுரைத்துப் போருக்குப் புறப்பட்டான். இந்திரசித்தனுக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது.கடைசியில் இந்திரசித்தன் அனுமனைப் பிரம்மாஸ்திரத்தால் கட்டிவிட்டான். அனுமனும் நான்முகன் படைக்குக் கட்டுப்பட்டு பொறுமையுடன் அமைதியாக விருந்தான். அரக்கர்கள் பலரும் சேர்ந்து அனுமனைக் கட்டி இராவணன் முன்பாக இழுத்துக் கொண்டு போய் நிறுத்தினார்கள். அனுமனை யாரென்று விவரம் கேட்ட பின்னர், இராவணன், “குரங்கு வார்த்தையும் மானிடர் கொற்றமும் இருக்க நிற்க, நீ என் கொல் அடா இரும் புறத்தினுள் தரும் தூது புகுந்த பின் அரக்கரைக் கொன்றது? அஃதுரையாய்”