பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கம்பனும் மானுடமும். ||7 என்றும் இராவணன் கூற வீடணன் இலங்கையை விட்டு வெளியேறி விட்டான். இங்கு இராவணன் சபையில் மானுடர் பற்றிய விவாதமும் அதில் கும்பகருணன், மகோதரன், இந்திரசித்தன், இராவணன், வீடணன் ஆகியோருடைய கருத்துக்களும், முன் வைக்கப் படுகின்றன. அரக்கர் தலைவர்கள் மானுடர்களைப் பற்றி இகழ்ச்சியாகப் பேசுவதையும் வீடணன் உண்மையை உணர்த்த முயலுவதையும் காண முடிகிறது. சேது அணை கட்டப்பட்டு வானரசேனை கடலைக் கடந்து இலங்கை சென்று அந்நகரை முற்றுகையிட்டது. முதல் நாள் போர் தொடங்கியது. இராவணன் போர்க்கோலம் பூண்டுப் போர்க் களத்திற்கு வந்து தானே நேரில் நின்று முதல்நாள் போரைத் தொடங்குகிறான். போர் சுலபமாகவும், சுருக்கமாகவும் முடிந்து விடும் எளிதில் வெற்றி கிடைத்துவிடும் என்று இலங்கையர் கோன் கருதியிருக்கலாம். ஆனால் அவனுடைய எதிர் பார்ப்புக்கு நேர்மாறாக கடும்போர் நடை பெறுகிறது. சுக்கிரீவன் மாருதி ஆகியோர் இராவணனை எதிர்த்துப் போரிட்டுத் தளர்ச்சியடைகிறார்கள். குரங்குப் படைகள் நிலை குலைந்தன. இலக்குவன் வந்து இராவணனை எதிர்த்தான் அப்போது “ஆற்றல் சால் அரக்கன் தானும் அயல் . நின்ற வயவர் நெஞ்சம் வீற்று வீற்றாகி உற்ற தன்மையும் வீரன் தம்பி கூற்றின் வெம்புருவம் அன்ன சிலை நெடும் குரலும் கேளா ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிதன் என்றான்” என்று கூறி இலக்குவனுடைய போர்த் திறனைக் கண்டு ஆச்சரியப் பட்டு இராவணன் மிகுந்த ஆவேசத்துடனும் கோபத்துடனும் போரிட்டான்.